HEALTH CARE TIPS
கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்..?
கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் […]
கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!
கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டா்கள் எச்சரித்துள்ளனர். கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இந்த நிலையில், கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவா்கள் கூறியதாவது: “பருவ காலங்களில் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது அது நேரடியாக கண்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு […]
பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!!
பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!! உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு நீங்க தினமும் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை.. கால்சியம் பற்றி நம் அனைவருக்கும் பொதுவான அறிவு இருக்கிறது. பாலில் கால்சியம் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் உடலில் கால்சியம் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, பல் பிரச்சனை, எலும்பு பிரச்சனை போன்றவை ஆகும் ஆனால் பாலை விடவும் கால்சியம் அதிகம் உள்ள சில உணவுகள் உள்ளன. […]
வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்..!
பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் கொரோனா தொற்றுநோயை விட 100 மடங்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். கொரோனா வைரஸுக்குப் பிறகு, உலகம் மற்றொரு தொற்றுநோயான பறவைக் காய்ச்சல் H5N1 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நோய் கொரோனா வைரஸை விட 100 மடங்கு ஆபத்தானது என்று அவர்கள் நம்புகிறார்கள். இதில் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தீவிர நிலைகளை நெருங்கி […]
தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை | உமாகாந்தன்
தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம். இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் […]
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் |Dr Chockalingam cardiologist
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் |Dr Chockalingam cardiologist chennai|heart attack symptoms in tamil டாக்டர் சொக்கலிங்கம் அவர்களின் விரிவான நேர்முகம் தயாரிப்பு :Doctor interview you tube சேனல் மாரடைப்பு வராமல் இருக்க அவர் சொல்லும் மூன்று எளிய வழிகள் 1. உண்ணுகிற உணவு 2. எண்ணுகிற மனம் 3. சீரான உடற்பயிற்சி மேலும் தொடர்ந்து பாருங்க வீடியோ courtesy :Doctor Interview தேங்க்ஸ் வீடியோ courtesy :Doctor Interview தேங்க்ஸ் Doctor Interview” Youtube […]
திருவாதிரைக் களியும் தாளகக் குழம்பும்
திருவாதிரை ஸ்பெஷல் திருவாதிரைக் களியும் தாளகக் குழம்பும் மார்கழி திருவாதிரை – ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசேஷ தினமாகக் கொண்டாடப்படும். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில்களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழி திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது. ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்பது பழமொழி. எனவே, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று இந்தக் களியைச் செய்து ஆண்டவனுக்குப் படைத்து […]
கேரளாவில் ‘ஜெஎன்.1’ தொற்று குறித்து அச்சம் தேவையில்லை – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!
கேரளாவில் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; “எந்தக் கவலையும் தேவையில்லை. அது ஒரு துணை மாறுபாடு தொற்று. […]
தமிழ்நாட்டில் பரவும் புதியவகை கொரோனா – அமைச்சர் மா.சுப்ரமணியன்..! | சதீஸ்
தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் தொன்மைத் தமிழ்நாடு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் மொழி அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் […]
கேரளாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்..! | நா.சதீஸ்குமார்
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் […]