சாப்பிடப் போறீங்களா? அப்ப இதை படிங்க,,,! | தனுஜா ஜெயராமன்
அட! சாப்பிடுவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாப்பிடும் போது முறையாக சாப்பிட்டால் வளமாக வாழலாம். எல்லாவற்றிற்கும் நேரம் காலம் உண்டு. அதே போல் சாப்பிடவும் சிறப்பு நேரங்கள் உண்டு. சரியான நேரத்தில் சாப்பிட்டால் உணவு நன்றாக செரிமானம் ஆகி நன்றாக பசியுணர்வு ஏற்படும்.
எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
முதலில் சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.
நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள்
குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்கள்
எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்
பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது.
சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க.
கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.
அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.
பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம்.
பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.
ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடப் பழகவும்.
இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளைச் சேர்க்க வேண்டாம்.
சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள். பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.
சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.
சாப்பிட வேண்டிய நேரம்…
காலை – 7 to 9 மணிக்குள்
மதியம் – 1 to 3 மணிக்குள்
இரவு – 7 to 9 மணிக்குள்
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.
சாப்பிடும் முன்பும் பின்பும் மறக்காமல் இறைவனுக்கு நன்றி சொல்லவோம்.
டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
முறையாக சாப்பிடுவோம்..!
ஆரோக்கியமாக வாழுவோம்..!