பிப்ரவரி – 2ம் தேதி, பாரதிய வித்யா பவனில் கண்ணதாசனின் காவிய மழையைப் பொழிந்தவர். திருமதி. லலிதாமோகன் அவர்கள்.
காலமெல்லாம் கண்ணதாசன்-6 திரையிசையில் ராகபுஷ்பங்கள் நிகழ்வை உரத்தசிந்தனை மாத இதழ் ஆசிரியர். திரு. உதயம்ராம் தொகுத்து வழங்கினார். இயக்குநர் பாரதிய வித்யாபவன் திரு.கே.என்.ராமசாமி. அவர்கள் தலைமையில் விழா தொடங்கியது.

முனைவர் சரஸ்வதி ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக தொடங்கியது விழா.
காலமெல்லாம் கண்ணதாசன் ஆறாவது பகுதி…..கண்ணதாசன் அவர்களின் பாடல்களையும், அவரின் கவியாளுமையும் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. சரஸ்வதி ராமநாதன் அவர்கள் அற்புதமாக விவரித்தார். இணைப்புரையை இனிப்புரையாக மாற்றினார்.
பாடலில் ராகங்களின் விவரிப்போடு, ஆலோபனையோடும் முனைவர். கர்நாடக இசைக் கலைஞர் லலிதாமோகன் அவர்கள் தன் அருமையான குரலில் பாடினார்.
திரையிசையில் ராக புஷ்பங்கள். குரலும், அதில் வழிந்தோடும் பாடலும்…ஒரு நாள் போதுமா என்ற திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பாடலை தன் குரலில் பாடியபோது விழி இமைக்காமல் ரசிக்க வைத்தார். அற்புதமான பாடல்கள். பாடலின் நடுவில் ராகங்களின் விவரிப்பும் அட்டகாசம்.
அதிசயராகம்….என் பிளே லிஸ்டில் அடிக்கடி ஒலிக்கும் பாடல். திரு.ஜேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டது. திருமதி. லலிதாமோகனின் குரலில் கேட்பதும் ரசிக்க வைத்தது. நாதமெனும் கோவிலிலே வாணியம்மாவின் குரலை தனதாக்கி பாடினார். அதிலும். இறுதியில் திரைப்பாடலில் இல்லாத ஆலாபானையைச் சேர்த்தது. லயிக்க வைத்தது.
முனைவர். லலிதாமோகன் அவர்களின் அழைப்பில்….நான் சென்றிருந்தேன். அருமையான நிகழ்வு. நல்வாழ்த்துகள் அவர்களுக்கு.
திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் தன் வாழ்த்துரையில்,
“கண்ணதாசன் சிறந்த பாடலாசிரியர் மட்டுமல்ல, சாகித்ய அகடெமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளரும்கூட.
தவிர அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் இரண்டும் எழுதியவர், தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வன வாசம் புத்தகத்தில் ஒளிவு மறைவில்லாமல் உண்மைகளை எழுதியவர். தன் வரலாற்றில் நான், எனது என்கிற தன்னிலை வார்த்தைகளே இல்லாமல் ‘அவன்’ என்று படர்க்கையில் குறிப்பிட்டு எழுதியவர் என்று தெரிவித்தார்.
உரத்தசிந்தனை தலைவர் திருமதி.பத்மினி பட்டாபிராமன், திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், மற்றும் அவரின் திருமதி. சாந்தி பிரபாகர். திரு.உதயம்ராம் மற்றும் அவர்களின் திருமதி அவர்கள். திரு. ராஜாராம் . திரு. அமுதா பாலகிருஷ்ணன். திருமதி. மோகனா சுகதேவ், தோழி திவன்யா, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
