நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார் சத்துணவு அமைப்பாளரும், பிரபல நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) முறைப்படி இணைந்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திமுகவில் இணைந்த சத்துணவு அமைப்பாளர் திவ்யா! இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி டிஆர் பாலு, அமைச்சர்கள் பிகே சேகர் பாபு, நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். […]Read More
சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்..!
மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வருகை தந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து கீழே இறங்கி கையசைத்தவாறும், வணக்கம் தெரிவித்தபடியும் நடந்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் […]Read More
கருங்குழி பூஞ்சேரி இடையில் புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்..!
கருங்குழி பூஞ்சேரி இடையில் உள்ள 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, தினசரி கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. முக்கியமாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில், சென்னைக்கு செல்லும்போதும், சென்னையில் இருந்து செல்லும்போதும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான நுழைவாயில் போன்ற பகுதி இது என்பதால், […]Read More
நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வே சாதனை..!
”தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டில், 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் அதிகம்,” என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், நேற்று குடியரசு தின விழா நடந்தது. இதில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் பேசியதாவது: தெற்கு ரயில்வே வருவாய் உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், இதுவரை 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. […]Read More
விரைவில் தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!
தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன். அதுமட்டுமல்ல, சகோதரர் திருமாவளவனின் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகையில் அவர்தம் திருவுருவச் சிலைகளையும் நிறுவிடுவோம். தமிழைக் […]Read More
தமிழ்நாடு காவலர்களுக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு..!
தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையில் சிறப்பாக செயல்படும் வீரதீர செயல்களுக்கான விருது, மெச்சத்தக்க சேவைக்கான விருது மற்றும் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவலர்களுக்கு 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]Read More
இன்று டி20 கிரிக்கெட் போட்டி|சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு..!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் […]Read More
இன்று சென்னையில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்..!
சென்னையில் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி […]Read More
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு..!
குடியரசு தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். கவர்னர் தலைமையில் நடைபெறும் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள். […]Read More
சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி..!
பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக பஸ் சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More
- Gambling establishment for Aussie Participants to your Android & new iphone 4
- நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில்
- ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- திரிவேணி சங்கமத்தில் 15 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்..!
- ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்த கவுண்டவுன் ஸ்டார்ட்..!
- சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்..!
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்குப்பதிவு நிறைவு..!
- புது தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 28)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 28)