எழுத்தாளர் சிவசங்கரியின் அறம் செய விரும்பு சார்பில் 70 முதியோர்களுக்கு போர்வைகள் வழங்குதல்
உரத்த சிந்தனை அமைப்பினரான நாங்கள் குடியரசு தினத்தை பெருங்களத்தூர் அருகில் இறையூரில் இயங்கும் சித்தாந்தா நியூலைஃப் ட்ரஸ்ட்டின் முதியோர் இல்லத்தில் கொடியேற்றிக் கொண்டாடினோம்.

முதியோரின் பிரச்சினைகளை, அவர்களைக் குறையில்லாமல் நிர்வகிக்கும் பிரச்சினைகளை நான், எழுத்தாளர் திருமதி மீரா முரளி, உரத்த சிந்தனை தலைவி பத்மினி பட்டாபிராமன் மூவரும் குட்டிக் கதைகள் சொல்லிப் பேசினோம்.
25000/- அன்பளித்து பேசிய டெக்னோ முரளி திடீர் அறிவிப்பாக தன் மகளின் பிறந்த நாள் பரிசாக ரூ 11000/- வழங்கி, கோசாலையில் மாடுகளின் ஷெட்டுக்கு மின் விசிறிகள் வாங்கி அனுப்புவதாகவும் சொன்னார்.

விதை போட்டு 35 வருடங்களில் விருட்சமாக வளர்த்து 80 முதியோர்களைப் பராமரித்து வரும் வாழும் தெய்வங்களான சுவாமி, லலிதா தம்பதியின் பார்வை, பேச்சு, உபசரிப்பு எதிலும் அன்பும், பண்பும் தவழ்ந்தன.
சமீபத்தில் அத்தனைச் சுவையான மதிய விருந்தை சாப்பிட்டதில்லை. சுடச்சுட பரிமாறப்பட்ட வடையை கேட்டுக் கேட்டு மூன்று சாப்பிட்டேன்.
சிவசங்கரி அவர்களின் அறம் செய விரும்பு அறக்கட்டளை மூலம் அவர் சார்பாக 70 முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கினோம்.

பத்மஸ்ரீ விருது பெற்ற அவரை வாழ்த்தி அனைவரும் கை தட்டினோம். வீடியோ பதிவு அவருக்கு அனுப்பப்பட்டது.
நியூ லைஃப் ட்ரஸ்ட் நடத்தும் கோசாலை சென்று 60 மாடுகளை நலம் விசாரித்து அகத்திக் கீரை கொடுத்தோம்.
அருகிலிருந்த சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சரியான கூட்டம்.
வேனில் போகும்போதும் வரும்போதும் சிற்றுண்டியும், அரட்டையும், பாட்டும், சிரிப்பும் மனதை நிறைத்தது.

பயணத்தையும், நிகழ்வையும் வழக்கம்போல அழகாகத் திட்டமிட்டு அமைத்த எங்கள் பொதுச்செயலாளர் உதயம் ராமுக்கு நன்றி.
அச்சோ..ஒரு முக்கியமான விஷயத்தை மிஸ் செய்யவிருந்தேன்.
இந்த நிகழ்வில் என் மனைவி சாந்தி, கண்ணன் மீது ஒரு பாட்டு பாடினார். முதியோர்கள் அனைவரையும் அவரைத் தொடர்ந்து வரிவரியாகப் பாடவும் வைத்தார்.
முகநூலில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பதிவு…
