தேசிய அளவிலான கே.எப்.ஐ. கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சண்டிகர், பஞ்சாப், இமாச்சல்பிரதேஷ், காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலிருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர். அதில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோஸியேஷனிலிருந்து 11 வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாகப் போட்டியிட்டனர். அவர்களில் 4 பேர் வெள்ளி யும், 4 பேர் வெங்கலப் பதக்கங்களையும் வென்றனர். இந்தப் போட்டியில் தமிழகத்தின் கிக் பாக்ஸிங் […]Read More
இந்திய வாகனச் சந்தையில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானிய நிறுவனமான சுசுகி மோட்டார் ஏறக்குறைய 50 சதவிகித இடத்தை வகிக் கிறது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கை டிரைவ் நிறுவனம் பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களும் பறக்கும் கார் தயாரிக்க ஒப்பந்தம் செய் திருக்கின்றன. இரண்டு பேர் பயணிக்கக்கூடிய பறக்கும் கார் தயாரிப்பில் ஸ்கைட்ரைவ் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார் மாசு வெளியிடாத தன்மை […]Read More
பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம் தான் ஹோலி. இந்தப் பண்டிகை அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பண்டிகை, குஜராத் மாநிலத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலிப் பண்டிகையின் முக்கியக் குறிக்கோளாகும். இந்தப் பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண் டாடப்படும். இயற்கையின் மாற்றத்தைக் கொண்டாடும் பண்டிகை என்றா லும், இதற்கும் புராணக் கதைகள் இருக்கின்றன. கிருஷ்ண […]Read More
1930ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் 10,000 பேர் குழுமினர். பிரார்த்தனைக் கூட்ட முடிவில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்தத் தண்டி யாத்திரை பற்றி மகாத்மா காந்தி பேருரை ஆற்றினார். “உங்களிடம் நான் ஆற்றும் கடைசி உரையாக இது அமையலாம். அரசாங்கம் நாளை காலை பேரணி நடத்த எனக்கு அனுமதி வழங்கினாலும், சபர்மதியின் புனித கரைகளில் எனது கடைசி உரையாகவே இது இருக்கும். என்னுடைய வாழ்வின் இறுதி வார்த்தைகளாகக்கூட […]Read More
நான்காவது முறையாக இந்தியாவின் சுத்தமான நகரம் என்கிற விருதை தட்டிச் சென்றது இந்தூர். இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்த வருஷம் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கிறது. அதில் நம் திருச்சி நகரமும் இடம் பிடித்திருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தூர் இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது இந்த நகரம். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த மதிப்பைப் பெற்ற ம.பி. அரசுக்கு வாழ்த்துகள் […]Read More
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களாக ரிலையன்ஸ் இன்டஸ்ட் ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளனர். இந்த நிலையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரமதர் மோடியின் ஆசிபெற்ற கௌதம் அதானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் உலகின் பணக்காரர்கள் வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஆசிய பணக்காரர்கள் பட்டிய லில் முகேஷ் அம்பானியை முந்திக்கொண்டு கௌதம் அதானி முதல் இடத்தைப் பிடித்தார் என்று […]Read More
94 வயது முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். வாடகை செலுத்தாத தால் வீட்டிலிருந்து பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி, குவளைகளை வெளியே தூக்கி எறிந்தார் வீட்டு உரிமையாளர். வீடு, பூட்டு பூட்டித் தொங்கியது. வாடகை செலுத்த சிறிது அவகாசம் கொடுக்கு மாறு உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்தார் முதியவர். அக்கம்பக்கத்தினரும் முதியவரைக் கண்டு பரிதாபப்பட்டு, வாடகை செலுத்த சிறிது அவகாசம் கொடுக்குமாறு நில உரிமையாளரிடம் பரிந்துரைத்தனர். நில உரிமையாளர் சிறிது அவகாசம் கொடுத்தார். […]Read More
இந்திய இசையுலகின் ராணியாகவே 50 ஆண்டுகளுக்கும் மேல் ரசிகர்களை ஆட்சி செய்து வந்த லதா மங்கேஷ்கர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாடும்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92ஆவது வயதில் (6-2-2022) இன்று காலை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு Breach Candy மருத்துவமனையில் 28 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முதலில் கொரோனா மற்றும் நிமோனியா தொற்று காரணமாக மருத்துவ மனையிலிருந்து உடல்நிலை தேறி வந்ததால் லதா மங்கேஷ்கருக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் […]Read More
இந்தியாவுக்குள் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்கார வியாபார கம்பெனி கள்ளத்தனமாகத் தம் பண அதிகாரத்தைச் செலுத்தி பகுதி பகுதியாக நிலங்களை வாங்கிக் குவித்தது. இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்பதை உணர்ந்த வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசு அந்த வியாபாரிகளின் மூலம் இந்திய நாட்டையே பிடிக்க ரகசிய திட்டம் போட்டு நாட்டைத் துண்டாடியது. அப்போது துண்டுத் துண்டாக குறுநில மன்னர்களும் திவான்களும் பண்ணையார்களும் நிலக்கிழார்களும் இங்கு ஆண்டு கொண்டிருந்தனர். அவர் களிடம் உறவாடி, தந்திரமாகப் பேசி, தம் அடிமை வளைக்குள் சிக்க […]Read More
மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.
மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே நாளிலேயே மிகவும் அவதிக்குள்ளானார்கள் ஆரம்பித்த முதல் நாளிலேயே எட்டு செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பருவமழை பத்தாம் தேதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இரண்டு நாட்கள் முன்னதாக எட்டாம் தேதியே ஆரம்பித்துவிட்டது என்பது […]Read More
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
- ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
- ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்