புத்தக விமர்சனம்
புத்தகம் :சும்மா இருப்பதே சுகம்
பேசும் புத்தகங்கள்
புத்தக விமர்சனம்
புத்தகம் :சும்மா இருப்பதே சுகம்
ஆசிரியர் :ந.அசோகன்
வெளியீடு: பாரதி மோகன் வெளியீடு பி.105,புளூமிங்டேல் குடியிருப்பு,
கிழக்கு முதன்மைச் சாலை,
சங்கர் நகர்,
பம்மல், சென்னை -600075
கைப் பேசி: 9444391884
வெளியீடு ஆண்டு:மே 2025
விலை:ரூபாய் 250
பக்கம் : XLIV+164

புத்தக விமர்சனம்: உமகாந்தன்

இந்த நூலின் ஆசிரியர்
திரு அசோகன் கூட்டுறவு துறையில் பணியாற்றி கூடுதல் பதிவாளராக ஓய்வு பெற்றார்.இவர் தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.தனது இல்லத்தில் சிறிய நூல் நிலையம் ஒன்றை நிறுவி நடத்திக் கொண்டு வருகிறார்.

இந்த நூல் இலக்கிய, சமய, சமுதாயக் கட்டுரைகளைக் கொண்டது.
இந்த நூலில் இவரால் 11 கட்டுரைகள் வெவ்வேறு தலைப்பு களில் படைக்கப்பட்டுள்ளது.
நூலின் தலைப்பே ஒரு கட்டுரை ஆகும்
. ‘சும்மா இருப்பதே சுகம் ‘ சும்மா என்ற சொல்லுக்கு இவ்வளவு அர்த்தமா என வியக்கும் அளவுக்கு சொல்லி இருக்கிறார். தன்னில் இலயித்து நிற்றல் அல்லது தன்னில் நிலை பெறுதல் என சொல்லி இந்த சொல் உயர் ஞான நெறிகளைச் சுட்டும் வகையில் ஆளப்படுகிறது என்பதை ஆய்ந்து சொல்லி இருக்கிறார்
இதற்கான இவர் கொடுத்து இருக்கும்
மேற்கோள்கள் இதனை படிக்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இவர் அனைத்துக் கட்டுரைகளை படைத்த பின்பு அதற்கு கீழ் அந்தக் கட்டுரைக்கு உதவிய நூல்கள் என பட்டியல் இட்டு கொடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த மேற்கோள் புத்தகங்களை பார்க்கும் போது ஒவ்வொரு கட்டுரையை படைக்க மிகவும் சிரத்தை எடுத்து கொண்டு அதை ஒரு முழு மையான தா க கொடுத்து இருக்கிறார் என சொல்லலாம்
நாமும் இதனை குறிப்பு எடுத்து கொண்டு அந்த புத்தங்களை வாங்கி படிக்க வேண்டும் என ஆவலை உந்து படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தத் தொகுப்பில் வந்துள்ள இதர கட்டுரைகள் அனைத்தும் நம் மனதில் இடம்பெறுகின்றன.
எந்த தலைப்பு எடுத்துக் கொண்டாலும் அதற்கு தேவையான கருத்துக்களை தக்க மேற்கோள் களுடன் திறம்பட எடுத்து விளக்கியி ருப்பது இவரின் தனித்திறமையை காட் டுகிறது.
இந்த நூலை படித்த பின் என்னோட கருத்து என்னவென்றால் இந்த நூலை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்பதே.
இவரின் இதர 10 கட்டுரைகளை இங்கே விரிவாக விமர்சனம் செய்ய இயலாது என்பதால் மிக சுருக்கமா க சொல்லுகிறேன்.
‘பொய்மையும் வாய்மை இடத்த‘ இந்த கட்டுரையில் வாய்மை விட உ யர்ந்தது வேறு ஒன்றும் இல்லை என்கிற கருத்தை ஆழமாக பல மேற்கோள்களுடன் சொல்லி இருக்கிறார்.
“திருக்குறளில் ஊழ்’ கட்டுரையும் உயிர் வாழ்க்கையானது ஊ ழ் வினையின் வழியே செல்லும் அதற்கு மாறாக செல்லாது என சொல்கிறது
‘ சமயங்கள் வளர்த்த தமிழ் ‘ இது இவர் ஆற்றிய உரை யாகும்.பல ஆறுகள் ஓடி வழியில் உள்ள நிலங்களை வளப்படுத்துவது போல் பல சமயங்களும் தமிழ் நிலத்தில் பாய்ந்து தமிழை வளர்த்தது என்பதே இந்த கட்டுரை யின் மூல க் கூற்று. உண்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை என சொல்வார்கள். இங்கு வேற்றுமை என்பது பல சமயங்கள். ஒற்றுமை என்பது நமது தாய்த் தமிழ்.
மிக நுணுக்கமான இந்த செய்தியை வெளிப்படுத்து கிறது இந்த கட்டுரை.
“திருநாவுக்கரசுவாமிகள் உணர்த்தும் வாழ்வியல் பண்புகள்” மற்றும் “திருவாசகம் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்” இந்த இரு கட்டுரைகளும் அவர்களை வேறு கோணத்தில் ஆராய்ந்து இவரின் பார்வையிலே அவர்கள் சொன்ன வாழ்வியல் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
‘சைவ சித்தாந்த பெருமன்றம் நூற்றாண்டு விழா மலர் (1905-2005)‘ இந்த கட்டுரை இவர் கண் வழியே நாம் படித்தது போல் உணர்வோம்.
‘ஒவ்வொரு மூங்கிலும் புல்லாங்குழ ல் ‘ இது கவிஞர் வெ. பெருமாள் சாமி அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா வில் இவர் ஆற்றிய உரையே இந்த கட்டுரை. இந்த கட்டுரை யை படிக்கும் போது கவிஞரின் கவிதை நூலை வாங்கி படிக்க வேண்டும் என ஆவலை தூண்டுகிறது.
‘தவறிழைத்த இராமனும் தட்டி கேட்ட கம்பனும் ‘இது அந்த நூல் பற்றிய அறிமுகவுரையே இந்த கட்டுரை யாகும். வாலியின் வதையினால் இராமனுக்கு ஏற்பட்ட களங்கத்தை இந்த நூல் ஆசிரியர் திரு. ஆறுமுகம் சொல்லியிருக்கின்றார் என்பதை அறிந்து இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும் என்பது உண்மைதான்
“தமிழ் தென்றல் திரு. வி. க வி ன் தேசியத் தொண்டு” கட்டுரை திரு. வி. கவின் தொண்டையும் மற்றும் தொண்டு செய்வது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோளாக கொள்ளவேண்டும் என்பதை சொல்கிறது.
” மரணம் இல்லா பெருவாழ்வு’ கட்டுரையில் அந்த வாழ்வை பற்றிய சில அறிஞர்களின் நூல்களை பயின்ற தன் விளைவாக தோன்றிய சிந்தனை களை ப் பகிர்ந்து கொண்டு ள்ளார்.
இந்த கட்டுரை யின் இரண்டாம் பகுதியாக வள்ளலார் அருளிய ” மரணமிலாப் பெருவாழ்வு” கட்டுரை யில் திருவருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அவர்களின் இது பற்றிய 28 பாடல்களை வழங்கி அந்த பெருவாழ்வு பற்றி சொல்லி கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலுக்கு இவர் எழுதிய தெளிவுரையை கொடுத்திருக்கிறார்.தெளிவுரை மிகவும் எளிதாக இருக்கிறது நாம் படிப்பதற்கும் மிகவும் புரியும் படி உள்ளது.” மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திட வாருங்கள்” என அவர் வள்ளலாரின் பாடல்களை மிகவும் எளிதாக தனது தெளிவுரையுடன் கூறியுள்ளார்.
இவரின் இந்த” சும்மா இருப்பதே சுகம் ” நூல் ஒரு அரிய பொக்கிஷம் என கூறலாம்.இந்த கட்டுரைகள் சும்மா இருப்பதே சுகம் என்பது தலைப்பு அல்ல நாம் சும்மா இல் லா மல் இது போல் நூல்களை படித்து நம்முடைய அறிவு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுரை க் கான உதாரணங்கள், குறிப்புகள். மேற்கோள்கள் அனைத்தும் திறம் பட சேகரித்து அந்த கட்டுரை களின் தலைப்பு களுக்கு ஏற்ப கொடுத்து இருப்பது இவரின் அறிவு முதிர்ச்சி யை காண்பிக் கிறது.
இந்த கட்டுரை களை நாம் படிப்பதன் வாயிலாக நம்மை நாம் உயர்த்தி கொள்ள ஏதுவாக இருக்கும்
சாதாரணமாக எல்லோரும் படிக்க இவர் கட்டுரை கள் அமைந்து இருப்பது மிகவும் பாராட்டதக்கது.
- உமாகாந்தன்.
16-5-2025

Review is wonderful. It reflects the thoughts of everyone who reads the book. But the subject topics are considered so heavy because we have to go through again and again to catch the points of the author. Thanks for the review Uma.
தேங்க்ஸ் ராம். உங்களின் கருத்துகள் எங்களை மேலும் வளப்படுத்த உதவும். 🙏