இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 03 செவ்வாய்க்கிழமை  2026)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 03-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். சிலருக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடி யிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதக மாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டு.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பப் பொறுப்பு களை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது ஆறுதல் தரும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் படக்கூடும். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே தக்க முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல் லவும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். தாயாரின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர் களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற் சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெ டுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!