அண்மை செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க எலான் மஸ்க் திட்டம்..!
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் பற்றி பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் பேசக்கூடும் என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இணை தலைமையேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதன்பின்னர், பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஒன்றாக பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், […]
மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்..!
விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் எட்டு மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர் சென்ற ராக்கெட்தான். போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் இவர் சென்றார். இவருடன் அமெரிக்க […]
23 மின்சார ரெயில்கள் இன்று ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!
சென்டிரல்-கும்மிடிப்பூண்டி உள்பட 23 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- * சென்னை […]
நாடாளுமன்றத்தில் புதிய வருமானவரி மசோதா இன்று தாக்கல்..!
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வருமான வரி மசோதாவின் சிறப்பு […]
புதிய இந்திய தூதரகத்தை பிரான்சில் திறந்து வைத்த பிரதமர் மோடி..!
பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிசில் நேற்று தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இதனை தொடர்ந்து, பிரான்சின் மெர்சிலி நகருக்கு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள […]
தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை..!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.12) தொடர்ந்து சரிந்து வருகின்றன. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 76,188 என தொடங்கியது. தொடர்ந்து சரிந்து 75,388 என்ற நிலையை சென்செக்ஸ் எட்டியது. பகல் 12 மணி நிலவரப்படி 76,000 என்று நிலையை கடந்தது. சுமார் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியை பொறுத்தவரையில் இன்று வர்த்தகம் 23,050 என்ற […]
ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பள்ளி ஆசிரியர் மார்க் பொகெல் விடுதலை..!
ரஷ்ய சிறையில் நான்காண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பள்ளி ஆசிரியர் மார்க் பொகெல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் இந்த விடுதலை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஊழியராக பணியாற்றிய மார்க், அதன் பிறகு அங்குள்ள ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு போதைப் பொருள் வைத்திருந்ததாக அவரை ரஷ்ய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இரண்டு முறை […]
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்..!
ஒரு நாள் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி சூப்பர் வெற்றியை பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் […]
பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!
பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று […]
விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்..!
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளையும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆலோசனை கூட்டங்களை […]