எழுத்துக்கு மரியாதை

13 நூல் ஆசிரியர்களுக்கு ஆடிட்டர் என் ஆர் கே விருது மற்றும் ரூபாய் 48,000 /-பரிசுத்தொகை 8 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 1,65,000 /- கல்வி உதவி

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய  “எழுத்துக்கு மரியாதை” நிகழ்ச்சி  , சென்னை ராயப்பேட்டை சவுத் இந்தியா ஹையர் பர்சேஸ் அசோசியேஷன் நகர் அரங்கில் இன்று (14.06.2026)  காலை நடைபெற்றது.

முனைவர் லலிதா மோகன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட திரு. குரு.ஆறுமுகம் வரவேற்றுப் பேசினார்.

சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் முன்னிலை வகிக்க ஆடிட்டர் என் ஆர் கே தலைமை உரையாற்றினார்.

திரு.தேவிபாலா  திருமதி.கிரிஜா ராகவன் எழுதிய “மறுபடியும்” என்ற‌ நாவல் பற்றியும், திருமதி, சாந்தா தத் எழுதியுள்ள “கலைடாஸ்கோப்” என்ற சிறுகதைத் தொகுப்பு, Dr.திரு.பாஸ்கர் எழுதியுள்ள தர்மஸ்தம்பம் சிறுகதை நூல்  பற்றி சிறப்பாக மதிப்புரை வழங்கினார்.

முனைவர் ஆதிரா முல்லை திரு.திருவை பாபு அவர்களின் “கம்பனில்‌ இளங்கோ” , மற்றும் முனைவர் திருமதி.பத்மினி எழுதிய “காலத்தின் குரல் ” என்ற இலக்கிய கட்டுரைகள் குறித்த நூல்களுக்கு  சிறப்பாக மதிப்புரை வழங்கினார்.

கவிஞர் துருவன் கவிஞர் திரு, நிலா பாரதி எழுதிய “வற்றிய குளத்தில் கடைசி மீன்கள்” கவிஞர் திருமதி .பொற்கொடி எழுதிய “மௌனத்தின் மொழிபெயர்ப்பு” என்ற‌ கவிதை நூல்களில் சிறப்பான கவிதை வரிகளை எடுத்துக்காட்டி மதிப்புரை வழங்கினார்.

திருமதி ,வான்மதி மணிகண்டன் முனைவர் திரு. என். பத்ரி எழுதிய “வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்” மற்றும் திரு.பிரபு சங்கர் எழுதிய “சும்மா கிடைத்ததா சுதந்திரம்” , திரு.ராசி அழகப்பன் எழுதிய “பெண்ணே நீயே வெற்றிக்கு வழி” என்ற நூல், திரு.ரவி நவீனன் எழுதிய “நவீனன் நூற்றியெட்டு நினைவுகள்” பற்றி சிறப்பாக மேற்கோள்கள் காட்டி மதிப்புரை வழங்கினார். இரண்டு நூல்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ 2000/- வழங்கினார்.

யோகா பேராசிரியர் திருமதி,சுபா ரவிசங்கர் அவர்கள் திருமதி பவித்ரா நந்தகுமார் எழுதிய “சொல்லச் சொல்ல இனிக்குதடா” பற்றி அருமையாக மதிப்புரை வழங்கினார்.

திருமதி மனோன்மணி வரதராஜன் கவிஞர், திரு, சதுர்புஜன் எழுதிய “,குதூகலம் தரும் குழந்தைகள் பாடல்” பற்றி மதிப்புரை சிறப்பாக வழங்கினார். பத்திரிகையாளர் திருமதி. ப்ரீத்தி ராஜகோபால்  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் . விருது பெற்ற மேற்கண்ட பதின்மூன்று எழுத்தாளர்களுக்கும் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பயனாடை  ஆகியவற்றை திரு.N.R.K, திரைப்பட இயக்குநர் திரு.எஸ்‌.பி.முத்துராமன், திரு.தேவி பாலா ஆகியோர்  வழங்கி கௌரவித்தனர்.

விருது பெற்றவர்கள்  சார்பில்  எழுத்தாளர் திருமதி. பவித்ரா நந்தகுமார் ஏற்புரை வழங்கினார். கல்வி வள்ளல்  திரு.முத்துக்குமாரசாமி ரூ 80000/- திருமதி சிவசங்கரி 25000/-  திரு.தொலைபேசி மீரான் மகள் அஜிமா ரூ 25000/- பேராசிரியர் திருமதி.பாரதிப்பிரியா. ரூ 20000/- மருத்துவர் .அலமேலு ரூ 15000/-என 1,65,000 ரூபாய் எட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

திரைப்பட இயக்குநர் திரு.S.P.முத்துராமன் பரிசு பெற்ற எழுத்தாளர்களைப் பாராட்டியதுடன் இலக்கியவாதிகள் தொடர்ந்து மக்களைப் பண்படுத்தும் தேவையான கருத்துக்களுக்கு  முக்கியத்துவம் தங்கள் நூல்களில் பதிவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை சாய்சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் திரு.N. பஞ்சாபகேசன் வருடாவருடம் 20 வருடங்களாக எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து விருதும், ரொக்கப்பரிசும் தருகின்ற ஆடிட்டர் N.R.K. அவர்களையும், பரிசுபெற்ற‌ எழுத்தாளர்களையும் பாராட்டிப் பேசியதுடன் இன்றைய நிகழ்ச்சிக்கான உணவு உபசரிப்பையும் ஏற்றுக் கொண்டது பாராட்டுக்குரியது.

ஜெ.வி.கேட்டரிங்  திரு.அப்பு  அவர்களின் அருமையான உணவுடன் மனதும் வயிறும் நிறைந்த நிகழ்ச்சியாக அரங்கம் நிரம்பி வழிந்த நிகழ்ச்சியாக அமைந்தது.

பின்குறிப்புகள்

காலையில் அனைவருக்கும் கணேஷ் கிருஷ்ணன் ஏற்பாட்டில் சுடச் சுட மணக்கும் DOT காபி வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஆதிரா முல்லை நம் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராகவும் , வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் நம் உரத்த சிந்தனையின் வாழ்நாள் உறுப்பினராகவும் இணைந்தனர். எழுத்தாளர் பிரபுசங்கர் ரூ 5000/- எழுத்தாளர் அமுதா பொற்கொடி ரூ 10000/- அறம் செய விரும்பு திட்டத்திற்கு நன்கொடை வழங்கினர்.

படங்கள் : மணிவாசகர் குருமூர்த்தி

செய்தித் தொகுப்பு : ஜி. சுப்பிரமணியன்

காணொலித்தொகுப்பு :  மனோராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!