விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன?
ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.
சித்திரை முடிந்து வைகாசி பிறக்கப் போகிறது. இது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு.
தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. வைகாசி மாதம் விஷ்ணுபதி புண்ணியகாலம் பிறக்கப் போகிறது. இது ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.
தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை. பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம்.
விஷ்ணுபதி புண்யகாலம் நாளை மே 15, 2025 அன்று விருஷப சங்கரமனத்துடன் வருகிறது. அதிகாலை 1:30 முதல் காலை 10:30 வரை மங்களகரமானதாக கருதப்படுகிறது.

