‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

விழுப்​புரம்: விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த கொள்​ளார் கிராமத்​தில் உள்ள சிப்​காட் வளாகத்​தில் இன்று (பிப்.4) நடை​பெறும் அரசு விழா​வில் ‘என் கனவு என் எதிர்​காலம்’ திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்து சிறப்​புரை​யாற்ற உள்​ளார்.

காலை 10 மணிக்கு விழா தொடங்​கு​கிறது. ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் மற்​றும் சமூகப் பாது​காப்​புத் திட்​டம் குறித்த விளக்​கப் படங்​கள் காட்​சிப்​படுத்​தப்​படு​கின்​றன.

மேலும், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தின் செய​லாக்​கம் குறித்து ஒரு மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் இரு பயனாளி​களிடம் முதல்வர் ஸ்டா​லின் காணொலி வாயி​லாக உரை​யாற்​றுகிறார்.

தொடர்ந்​து, ‘என் கனவு என் எதிர்​காலம்’ திட்​டத்​தை​யும், இளைஞர்​களின் கனவு​களை பதிவு செய்ய உரு​வாக்​கப்​பட்​டுள்ள இணை​யதளத்​தை​யும் முதல்வர் தொடங்கி வைக்​கிறார்.

பின்​னர், விழுப்​புரம் மாவட்​டத்​தில் முடிவுற்ற பணி​களை திறந்​து​வைத்​து, புதிய திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டிவைக்​கும் முதல்வர், 1.80 லட்​சம் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார். முன்​ன​தாக, செஞ்சி சாலை​யில் ‘ரோடு ஷோ’ சென்று பொது​மக்​களை சந்​திக்க உள்​ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!