தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்

சிங்​காநல்​லூர், விரு​கம்​பாக்​கம் உள்​ளிட்ட 6 தொகு​தி​களின் தேர்​தல் சுற்​றுப்​பயண பொறுப்​பாளர் பணியி​லிருந்து வில​கு​வ​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை திடீரென அறி​வித்​துள்​ளார்.

தனது தந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லாத காரணத்​தால் அவரை உடனிருந்து கவனித்​துக் கொள்ள வேண்​டும் என்​ப​தற்​காக இந்த முடிவை எடுத்​துள்​ள​தாக அவர் தெரி​வித்​தார்.

முன்​ன​தாக, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழக சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு சுற்​றுப்​பயண பொறுப்​பாளர்​களை நியமித்து அறி​வித்​தார். அதன்​படி, ஒவ்​வொரு பொறுப்​பாள​ருக்​கும் 2 முதல் 7 தொகு​தி​கள் வரை ஒதுக்​கப்​பட்​டிருந்​தன. அதில், அண்​ணா​மலைக்கு கோவை சிங்​காநல்​லூர், மதுரை தெற்​கு, சென்னை விரு​கம்​பாக்​கம், சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி, தூத்​துக்​குடி மாவட்​டம் வை​குண்​டம், குமரி மாவட்​டம் பத்​ம​நாபபுரம் ஆகிய 6 தொகு​தி​களுக்கு சுற்​றுப்​பயண பொறுப்​பாளர் பணி வழங்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்​தப் பொறுப்​பிலிருந்து வில​கு​வ​தாக அண்​ணா​மலை நேற்று திடீரென அறி​வித்​துள்​ளார். இதுகுறித்து கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

வரவிருக்​கும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நான் போட்​டி​யிடு​வேனா என்று தெரிய​வில்​லை. அதற்கு காலம் தான் பதில் சொல்​லும். கட்சி மேலிடம் முடிவு செய்​யும். மேலும், எனது தந்​தை​யின் உடல்​நிலை சரி​யில்​லாத​தால். அவரை கவனித்​துக் கொள்ள வேண்​டி​யுள்​ளது. அது​தான் என் முதல் கடமை. எனவே, சிங்​காநல்​லூர், காரைக்​குடி உள்​ளிட்ட 6 தொகு​தி​களின் பாஜக தேர்​தல் சுற்​றுப்​பயண பொறுப்​பாளர் பணியி​லிருந்து நான் வில​கு​கிறேன். இது குறித்து கட்​சித் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனிட​மும் தெரி​வித்​திருக்​கிறேன். அதை ஏற்​றுக் கொண்​டு, எனக்கு பதில் வேறு பொறுப்​பாளர்​களை அவர் நியமிப்​பார்.

அதே நேரத்​தில் பாஜக பிரச்​சா​ரத்​திற்கு தயா​ராக உள்​ளேன். கட்சி சொல்​லும் வேலையை நான் செய்​வேன். யார் முதல்​வ​ராக வேண்​டும், யாருக்​காக வேலை பார்க்க வேண்​டும் என பாஜக தெளி​வாக உள்​ளது. நானும் ஒரு தொண்​டர் தான். கட்சி சொல்​வதை கேட்​ப​தற்கு நான் கடமைப்​பட்​டுள்​ளேன்.

ஒன்றே குலம், ஒரு​வனே தேவன் என அனை​வரை​யும் அரவணைத்​துச் சென்ற அண்​ணா​வின் ஆட்​சிக்​கும், திமுக​வுக்​கும் என்ன சம்​பந்​தம் உள்​ளது? அண்ணா வழியை பின்​பற்​றுகி​றோம் என திமுக கூறு​வதை யாரும் ஏற்​றுக் கொள்ள மாட்​டார்​கள். திமுக மீது இருக்​கும் மீது வெறுப்​பு, திரா​விட சித்​தாந்​தத்​தின் மீது இருக்​கும் வெறுப்​பாக மாறி​யுள்​ளது.

கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் திமுக வென்​றாலும், 56 சதவீத​மாக இருந்த அவர்​களது வாக்கு 41 சதவீத​மாக குறைந்​துள்​ளது. உடைந்த கண்​ணாடியை பசை வைத்து ஒட்​டியது போல திமுக கூட்​டணி உள்​ளது. ஐந்து ஆண்டு கால திமுக ஆட்​சி​யில் தமிழக மக்​களுக்கு அல்வா கொடுத்​துள்​ளனர்.

தவெக தலை​வர் விஜய் பேசுவதற்கு இவிஎம் இயந்​திரத்​தில் பதில் உள்​ளது. எங்​களிடம் டபிள் இன்​ஜின் உள்​ளது. ஆனால், விஜ​யிடம் இன்​ஜின் இல்​லை, வண்டி இல்​லை, ஆயில் இல்​லை, பெட்​ரோல் இல்​லை, அதை ஸ்டார்ட் செய்​வதற்கு ஆட்​கள் இல்​லை. இவர்​களெல்​லாம் பாஜகவை பார்த்து டப்பா இன்​ஜின் என்​கின்​ற​னர்.

திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் மன்​னிப்பு கேட்​டால் மட்​டும் போதாது. அதற்கு பின்​னணி​யில் உள்​ளவர்​கள் குறித்து நீதித்​துறை​யினர் விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!