ஐ.நா. பாதுகாப்பு கவுன்​சிலில் இந்தியா ஆதரவு

நியூ​யார்க்: வளை​குடா நாடு​கள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்​டனம் தெரி​வித்து ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் கொண்​டு​வரப்​பட்ட தீர்​மானத்தை இந்தியா வழிமொழிந்​தது. அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்​குதல் நடத்த தொடங்​கின.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகை​யில் அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் வளை​குடா ஒத்​துழைப்பு கவுன்​சில் நாடு​கள் மற்​றும் ஜோர்​டான் மீதான ஈரான் தாக்​குதல்​கள் மற்​றும் ஹார்முஸ் ஜலசந்​தி​யை முடக்கியிருப்பதற்கு கண்​டனம் தெரி​வித்​தும் ஈரானின் அனைத்து தாக்​குதல்​களை​யும் உடனே நிறுத்​தக் கோரி​யும் ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் தீர்​மானம் கொண்​டு​வரப்​பட்​டது. இதை பஹ்ரைன் முன்​னெடுத்​தது.

இத்​தீர்​மானத்தை ஆஸ்​திரேலி​யா, ஆஸ்​திரி​யா, வங்​கதேசம், பூடான், கனடா, எகிப்​து, பிரான்​ஸ், ஜெர்​மனி உள்​ளிட்ட 134 நாடு​களு​டன் இணைந்து இந்​தியா வழிமொழிந்​தது. இறு​தி​யாக நடந்த வாக்​கெடுப்​பில் பாது​காப்பு கவுன்​சலில் 15 உறுப்பு நாடு​களில் 13 நாடு​கள் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக வாக்​களித்​தன.

நிரந்தர உறுப்பு நாடு​களான சீனா​வும் ரஷ்​யா​வும் வாக்​கெடுப்​பில் கலந்​து​கொள்​ளாமல் புறக்கணித்தன. இதையடுத்து இத்தீர்மானம் நிறைவேறியது.. இதற்​கிடை​யில் ஈரானில் நடந்து வரும் போரி​னால் 3.2 மில்​லியன் மக்​கள் வரை இடம்​பெயர்ந்​துள்​ள​தாக ஐ.நா. அகதி​கள் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. பெரும்​பாலானோர் டெஹ்​ரான் மற்​றும் பிற முக்​கிய நகரங்​களி​லிருந்து நாட்​டின் வடக்கு அல்​லது கிராமப்​புறங்​களை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!