கருமையான கூந்தலுக்கு பெண்கள் அனைவருமே ஆசைப்படுவார்கள்
. பெண்களுக்கு அடர்த்தியான நீண்ட கூந்தல் இருந்தால் அழகு அதிகமாக மிளிரும். கார்மேகக் கூந்தலைக்கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை அணிந்திருந்தாலும் அந்தக் கூந்தல் அழகே அவளைப் பேரழகியாகக் காட்டும். அதனால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
கருகரு கூந்தல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி, கேசப் பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது.
கரிசலாங்கண்ணி இலையை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். கரிசலாங்கண்ணிச்சாறு- 3 கப் கீழா நெல்லி இலைச் சாறு – 1 கப் பொன்னாங்கண்ணி இலைச்சாறு -1கப் எலுமிச்சைச் சாறு – 1 கப் நெல்லிக்காய் பவுடர்-10கிராம் மேற்கண்ட அனைத்ததையும் 5 கப் நல்லெண்ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் சிறுதீயில் வைத்து சூடாக்கவும் . தைலப் பதத்துக்கு வந்ததும் நெல்லிக்காய் பவுடர் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.
இந்தத் தைலத்தை தினமும் தலையில் தேய்த்துவர நல்ல பலன்களைக் கொடுக்கும் கருகருவென கூந்தல் வளரும் என்பது உண்மை. கரிசலாங்கண்ணிச் சாற்றை சுட வைத்து இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டை பொடி, 5 கிராம் காய்ந்த ரோஜா இதழ்களைச் சேர்க்க வேண்டும்

இந்த எண்ணெயைத் தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும். பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு தினமும் சில துளி எண்ணெய் தடவினாலே போதும்.
அழகாக கருமையான கூந்தல் வளரும்.
