ஹோலி பண்டிகை

ஹோலி பண்டிகை

இந்தியா முழுக்க வண்ணங்களுடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

🌹

இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை.

இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை சிறப்பு விழா போல கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி தினத்தில் கலர் பொடிகளை தூவி விளையாடுவது வழக்கம்.

வட இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகை சமீப காலங்களில் நம் தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் சில இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது மற்றும் அதன் வரலாறு குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

🌹
🌿

ஹோலி பண்டிகை வரலாறு:

பொதுவாக பனிக்காலம் முடிந்து வெயில் காலம் மாறுவது வசந்த காலம் என்று கூறப்படுகிறது. இந்த வசந்த காலத்தில் பாக்டீரியா சார்ந்த காய்ச்சல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்கள் ஏற்படும். இதை எதிர்கொள்ளும் விதமாக ஹோலி பண்டிகை அன்று மக்கள் இயற்கையான வண்ணம் நிறைந்த பொடிகளை ஒருவர் மீது ஒருவர் எரிந்து விளையாடுகின்றர்.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த ஹோலி பண்டிகை அன்று ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். மேலும் ஹோலி பண்டிகை தினத்தன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த ஹோலி பண்டிகையின் போது தான் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒன்று என்ற மகத்துவம் ஓங்கி நிற்கும் என்பது தான் இந்த விழாவின் சிறப்பு அம்சம். ஹோலிகா தகனம்:

ஹோலிக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சி ஹோலிகா தகனம் என்று கூறப்படுகிறது. இது ஹோலி பண்டிகையின் முந்தன நாள் இரவு 8 மணிக்கு மேல் வீட்டு வாசலில் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்கினி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து மக்கள் பூஜை செய்யும் ஒரு விழா ஹோலிகா தகனம்.

இந்த விழாவில் பல வகையான இனிப்பு பண்டங்களும் அக்னி தேவனுக்கு தாம்பூலத்தில் படைக்கப்படுகிறது. பக்த பிரகலாதன் உயிர்பெற்று எழுந்ததையும் மற்றும் ஹோலிகா தகனம் ஆனதை ஒட்டியும் வட இந்திய மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹோலி ஹோலி என்று உற்சாகமாக குரல் எழுப்புவார்கள். இதனை அடுத்து தேங்காயுடன் பூஜை செய்து வைத்த இனிப்புகளையும் அக்னியில் போட்டு விடுவார்கள்.

இதற்கு மறுநாள் அதாவது ஹோலி பண்டிகை அன்று மக்கள் ஒருவருக்கொருவர் கலர் பொடிகளில் தூவி வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இந்த கலர் பொடி காற்றில் உயரப் பரந்து தேவர்களை மகிழ்விப்பதாக புராணங்களில் கூறப்படுகிறது

. ஹோலி பொடிகள்: இந்த ஹோலி பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் இந்த கலர் பொடிகள் ஆயுர்வேத மூலிகைகளான மஞ்சள் வேப்பிலை வில்வம் குங்குமம் போன்றவற்றால் தயாரிக்கப்படுவதால்

இதில் பல மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு நாளடைவில் வியாபார நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கை கலர் பொடிகளை அதிகமாக விற்று வருகின்றனர்

. இந்த செயற்கை கலர் பொடிகளால் சுற்றுச்சூழல் மற்றும் நம் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகிறது.

இதனால் ஹோலி பண்டிகையை கொண்டாடும் மக்கள் அனைவரும் இயற்கையான வண்ணப் பொடிகளை வாங்கி ஹோலியை கொண்டாடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!