ஸ்சீக்ரெட்ஸ்
இவன் தான் என்னவன்
அவன் கைகளை இருகப் பற்றுதலில் ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா … இவன் தான் என்னவன் என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன் புதியவர்கள் மத்தியில் அவன் கைகளுக்குள் புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன் அவனின் நெருக்கத்தில் ஓர் புது உலகில் மிதக்கிறேன் அவனின் கைகோர்த்தலில் பிரியாமலே வாழ்ந்து விட நேரத்தை கடத்தி வாய்ப்புகளை தே டி இன்னும் என்னென்ன பொய் சொல்லி இறுக்கத்திலிருந்து மீளாமல் பிணையலாமென திருட்டுத்தனமாய் திட்டம் தீட்டுவேனே அவன் கைகளை இருகப்பற்றுவதில் இன்னும் இன்னும் […]
பாப்கார்ன் நாள்
World popcorn day Popcorn lovers சோளபொறி🍿 ❤️ தீயிட்டு வறுப்பவனுக்கும் , அவன் போடும் இசைக்குஆனந்தமாய் கூத்தாடி புன்னகை பூக்கும் நடனகாரி..! பாப்கார்ன் நாளின் வரலாற்றைப் பற்றி விவாதிக்க, ஒருவர் பாப்கார்னின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அசல் சோளம் கோதுமையை விட கர்னல்களைக் கொண்ட சிறிய புல்லில் இருந்து பெறப்பட்டது. கவனமாகத் தேர்ந்தெடுத்து, தலைமுறை தலைமுறையாக இனப்பெருக்கம் செய்ததன் விளைவாக, இன்று நாம் சோளச் செடியாக நினைக்கிறோம். பழைய நாட்டிலிருந்து குடியேறியவர்கள் புதிய உலகத்திற்கு […]
தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம்
தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம் பல துறைகளில் அவர் வித்தகராக இருந்தார். பின்னாளில் பெரிய சாதனையாளராக அவர் ஆகக்கூடும் என்று அவரை இளம் வயதில் பார்த்த யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க பாட்டார்கள். பள்ளியில் அவர் அப்படியொன்றும் கெட்டிக்கார மாணவராக இருக்கவில்லை. அவருக்கு ஏற்பட்டது போன்ற சோதனைகள்வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்குமா என்பதே கேள்விக்குறிதான். அவர் அத்தனை இன்னல்களையும் கடந்தார். அவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அவரது தந்தை காலமாகி விட்டிருந்தார். தாயார் மறுமணம் செய்து கொண்டார். […]
உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி
*உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி – விவோ புதிய அறிமுகம்.* டிரோனில் கேமரா அல்லது கேமராக்களை பொருத்தி டிரோனைப் பறக்க விட்டு ‘பருந்துப் பார்வை’ படங்களை மிக உயரத்திலிருந்து கீழ் நோக்கி எடுத்து, நிகழ்ச்சிகளுக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்துவது அதிகமாகிறது. ஹெலிகாப்டரில் பறந்து படம் பிடிக்கச் செலவழித்த நிலையில், டிரோன்களின் பயன்பாட்டால் செலவினம் குறைந்துள்ளது. ஆண்டிராய்ட் அலைபேசிகள் அறிமுகமானதில் இருந்து திரைப்படம் எடுக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் சிறந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட அலைபேசிகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த […]
பபாசியும்…பாக்கெட் நாவலும்.
பபாசியும்… பாக்கெட் நாவலும். பேரன்புமிக்க பபாசி நிர்வாகிகளுக்கு வணக்கம். என் பெயர் ஜி.அசோகன், கடந்த 45 ஆண்டுகளாப் பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறையில் வாழ்ந்து வருகிறேன். நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஏனோ எழுதவில்லை. இப்போது அதற்கு நேரம் வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகப் பெரும் மழை, வெள்ளம் என உள்ளது. சென்ற மாதம் பெய்த மிக்ஜாம் புயலில் சென்னையே அதிர்ந்து விட்டது, தொடர்ந்து தென் தமிழ்நாட்டில் காட்டாற்டு […]
குழந்தைகளுக்கும் சுவாசப் பயிற்சி மனநிறைவு தியானம் மிக அவசியம்- இயக்குனர் லிங்குசாமி! | தனுஜாஜெயராமன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ இயக்கம் சார்பில் கிராமப்புற பொது நலவாழ்வு நலத்திட்டங்களுக்காக “ஒன்றிணைவோம் வா” மூலம் டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், “இளம் குழந்தைகளின் சுவாசப் பயிற்சிகளை மற்றும் மனநிறைவு தியானம் அவசியம். உங்கள் பிஸியான தினசரி அட்டவணையில் சில நிமிடங்கள் உண்மையை மனதளவில் உணர்ந்து, தெளிவு பெறவும், நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும், இதற்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை, எங்கும் செல்ல வேண்டியதில்லை..” என திரைப்பட […]
கால்நடை தீவன தொழில் பற்றி தெரியுமா? இதை படிங்க ப்ளீஸ்…! தனுஜா ஜெயராமன்
கிராமப்புற தொழில்களில் கால்நடை உணவு தயாரிப்பு தொழில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்தத் தொழிலை செய்யலாம். எல்லா பருவகாலத்திலும் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விவசாய மிச்சங்களான மக்காச்சோள உமி, கோதுமை தவிடு, தானியங்கள், கேக்குகள் மற்றும் புல் ஆகியவற்றை உயர்தர கால்நடை தீவனமாக மாற்றி விற்று பணம் சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பாக சில தேவையான லைசென்ஸ்களை பெற வேண்டும். இந்த லைசென்ஸ்கள் மட்டுமல்லாமல் வேறு சில விதிகளையும் […]
வெற்றிகளை அள்ள – நேர்மறை அணுகுமுறை | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
வாழ்வின் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நபரா நீங்கள்? எவ்வளவோ முயற்சிகள் செய்தும், எனக்குத் தோல்விகள் மட்டுமே பரிசாய்க் கிடைக்கின்றன என்று வாழ்க்கை சலித்து நிற்கும் நபரா நீங்கள்?… அப்படியென்றால் கொஞ்சம் உங்களின் காதைக் கொடுங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். தோல்விகளைத் தள்ளி, வெற்றிகளை அள்ள ஒரே வழி, உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். அதாவது உங்கள் ரூட்டைக் கொஞ்சம் மாற்றுங்கள். புலம்புவதை நிறுத்தி, நேர்மறையான அணுகுமுறையை பின்பற்ற ஆரம்பியுங்கள். நேர்மறையான அணுகுமுறை என்பது […]
கல்லீரலின் பாதுக்காவலன் “கீழாநெல்லி”
இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் கீழாநெல்லி.. இந்த கீழாநெல்லியால் பலவித நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்தாலும், முக்கியமாக 2 உள்ளுறுப்புகளை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது… கீழா நெல்லியை தவிர்த்துவிட்டு மருத்துவத்தை அறிய முடியாது.. இலைகளை தாங்கிப் பிடிக்கும், நடு நரம்பின் கீழ்ப்பாகம் முழுவதும் குட்டி குட்டி காய்கள் காணப்படும்.. அது தலைகீழாக குவிந்திருக்கும்.. பூக்களும் காய்களும் என மொத்த தொகுப்பாக காணப்படும். இந்த இலைகளுக்கு கீழே உள்ளதால்தான், கீழ்க்காய் நெல்லி என்பார்கள்.. கீழ்வாய் நெல்லி என்றும் சொல்வார்கள்.. […]
“மருந்தாகும் பூண்டு”
பூண்டை பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும். நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும். பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும். ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கெண்டால் வாதநோய் கட்டுப்படும். பூண்டுச் சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும். பூண்டை சிறிதளவு நீர் கலந்து […]