அவன் கைகளை இருகப் பற்றுதலில்
ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா
… இவன் தான் என்னவன்
என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன்
புதியவர்கள் மத்தியில்
அவன் கைகளுக்குள்
புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன்
அவனின் நெருக்கத்தில்
ஓர் புது உலகில் மிதக்கிறேன்
அவனின் கைகோர்த்தலில்
பிரியாமலே வாழ்ந்து விட
நேரத்தை கடத்தி வாய்ப்புகளை தே
டி இன்னும் என்னென்ன பொய் சொல்லி
இறுக்கத்திலிருந்து மீளாமல்
பிணையலாமென
திருட்டுத்தனமாய் திட்டம் தீட்டுவேனே
அவன் கைகளை இருகப்பற்றுவதில்
இன்னும் இன்னும் ரகசியங்களுண்டு
ஆனால்,கண்படுமே….
இத்துடன் முடித்துக்கொள்ளவா …
