கால்நடை தீவன தொழில் பற்றி தெரியுமா? இதை படிங்க ப்ளீஸ்…! தனுஜா ஜெயராமன்
கிராமப்புற தொழில்களில் கால்நடை உணவு தயாரிப்பு தொழில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்தத் தொழிலை செய்யலாம். எல்லா பருவகாலத்திலும் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விவசாய மிச்சங்களான மக்காச்சோள உமி, கோதுமை தவிடு, தானியங்கள், கேக்குகள் மற்றும் புல் ஆகியவற்றை உயர்தர கால்நடை தீவனமாக மாற்றி விற்று பணம் சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பாக சில தேவையான லைசென்ஸ்களை பெற வேண்டும். இந்த லைசென்ஸ்கள் மட்டுமல்லாமல் வேறு சில விதிகளையும் பின்பற்ற வேண்டும். தொழில் தரநிர்ணயத்துக்கான விதிகளை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். இந்த தொழில் பால் பண்ணைத் தொழில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய தொழிலாக விளங்குகிறது.
முதலில் கால்நடை தீவனப் பண்ணைக்கு ஒரு பெயரை சூட்ட வேண்டும். பின்னர் விற்பனை சட்டத்தின்கீழ் உங்கள் பண்ணையை பதிவு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின்- FSSAI Food License- உணவு லைசென்ஸை பெற வேண்டும்.இதற்கான ஜிஎஸ்டி பதிவையும் கட்டாயம் செய்ய வேண்டும். தயாரிப்பு பணிகளுக்காக நிறைய கால்நடை தீவன இயந்திரங்களை வாங்க வேண்டும். இதில் தயாரிக்கும் தீவனத்தின் தரத்தை சிறப்பாக மாற்ற இயந்திரங்கள் பெருமளவு உதவும்.
இந்த எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்னர் சுற்றுச்சூழல் கிளியரன்ஸை பெற வேண்டும். இதற்கு சுற்றுச்சூழல் துறையில் ஒரு தடையில்லா சான்றிதழை- NOC – வாங்கிக் கொள்ள வேண்டும். இது கட்டாயமாகும்.
அதேநேரத்தில் கால்நடை வளர்ப்புத்துறை துறையின் லைசென்ஸையும் வாங்க வேண்டியது கட்டாயமாகும். பண்ணையின் பெயரில் தீவனங்களை தயாரிக்க விரும்பினால் அதற்கான டிரேட்மார்க்கை பெற வேண்டும். ISI standard, BIS சான்றுகளை இதற்காக பெற வேண்டும். இந்த தொழில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் காரணத்தால் சிறப்பான பிஸ்னஸ் ஐடியாவாக பலருக்கு உள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தில் வசித்து வருபவருக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதற்கு தேவையான கடனுதவிகள் தாராளமாக கிடைக்கின்றன. அதை வைத்து தொழில்களை செய்து வந்தால் கைநிறைய வருமானம் பெறலாம்.