கல்லீரலின் பாதுக்காவலன்  “கீழாநெல்லி”

இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் கீழாநெல்லி.. இந்த கீழாநெல்லியால் பலவித நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்தாலும், முக்கியமாக 2 உள்ளுறுப்புகளை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது… கீழா நெல்லியை தவிர்த்துவிட்டு மருத்துவத்தை அறிய முடியாது.. இலைகளை தாங்கிப் பிடிக்கும், நடு நரம்பின் கீழ்ப்பாகம் முழுவதும் குட்டி குட்டி காய்கள் காணப்படும்.. அது தலைகீழாக குவிந்திருக்கும்.. பூக்களும் காய்களும் என மொத்த தொகுப்பாக காணப்படும். இந்த இலைகளுக்கு கீழே உள்ளதால்தான், கீழ்க்காய் நெல்லி என்பார்கள்.. கீழ்வாய் நெல்லி என்றும் சொல்வார்கள்.. எங்கெல்லாம் ஈரமான இடங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம், அதாவது, சாலையோரங்களில், வயல் வரப்புகளில், பாழ் நிலங்களில் என சாதாரணமாக சிதறிப்பூத்து கிடக்கும்.. கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் C, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. கீழாநெல்லியை கல்லீரலின் பாதுகாவலன் என்பார்கள்.. காரணம், இதன் தலையாய பயன் என்னவென்றால், மஞ்சள் காமாலை நோயை அடியோடு தீர்க்கிறது.. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இந்த 2 உறுப்புகளுக்கு மட்டுமே, கீழாநெல்லி செய்யும் அற்புதத்தை பார்க்கலாம்.

கீழாநெல்லியை செய்து, நன்றாக அரைத்து, அந்த விழுதை மோருடன் கலந்து குடித்து வந்தால், காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும்.. அல்லது கீழா நெல்லி பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.. இந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து, சீரகத்தூள், தேன் கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.. அல்லது இந்த செடியை காய வைத்து பொடி செய்து அதை மோரில் கலக்கி சாப்பிட்டாலும் காமாலை தீரும்.. மஞ்சள் காமாலை என்றில்லாமல், ஹெப்படைட்டிஸ்-B, ஹெப்படைட்டிஸ்-C போன்ற நோய்த்தொற்றுக்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீழாநெல்லிக்கு உண்டு.. இதை பயன்படுத்தும்போது, கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்கூட தடுத்து நிறுத்தப்பட்டுவிடுமாம். மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளவர்களை தடுத்து நிறுத்துவதற்கும், மீண்டும் இயல்பு நிலைக்கு உடலை கொண்டு வருவதற்கும் கீழாநெல்லி பெரும் பலனை தருகிறது.

கீழாநெல்லி இலையை மாத்திரை என்றே விற்பனையாகிறது.. இதை ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும், மஞ்சள் காமாலை கட்டுப்படும். ஆனால், கீழாநெல்லி இலை விழுதை குடிப்பதையும் விட்டுவிடக்கூடாது. கீழாநெல்லியுடன் சீரகம், ஏலக்காய், திராட்சை, போன்றவைகளுடன் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தாலும், மஞ்சள் காமாலை குணமாகும்.

கீழாநெல்லியில் 3 பங்கு நீர் சேர்த்து, 1 பங்கு நீராக சுண்ட காய்ச்சி குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறுமாம்.. தினமும் 3 வேளை சாப்பிட்ட பின்பு, கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், சர்க்கரை கட்டுக்குள் வரும்.. ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், டாக்டரின் அட்வைஸ்கள் இல்லாமல் இதை சாப்பிட கூடாது..சரியான ஆலோசனையை பெற்று சாப்பிடுவது சிறந்தது, பாதுகாப்பானதும்கூட. தலைமுடி பிரச்சனை, சரும பிரச்சனை, போன்றவற்றுக்கு இந்த இலையை அரைத்து தடவி வந்தாலே போதும்.. நிவாரணம் கிடைக்கும்.. சிலர். இதன் வேரை நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவுவார்கள். சிலர் இலையில் உப்பு சேர்த்து அரைத்து குளிப்பார்கள்.. இதனால், உடலிலுள்ள சொறி, சிரங்கு, அரிப்புகள் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!