மன அழுத்தம்
எதிர்நீச்சல்
மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது சவாலுக்கு நம் உடல் மற்றும் மனம் கொடுக்கும் எதிர்வினை இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பெரும்பாலும் மன அழுத்தம் நடுத்தர வயதினரையே தாக்கும் ஏனென்றால் தன் குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்றும் பிள்ளைகளை எப்படி நல்லபடியாக வளர்க்கப் போகிறோம் என்றும் அதற்கு தேவையான வருமானத்தை எப்படி ஈட்டப் போகிறோம் என்றும் நம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்றும் இது போன்ற சிந்தனை களாலேயே மன அழுத்தம் வந்துவிடுகிறது.
இந்த நவீன காலத்தில் நடுத்தர வயதினரை மட்டுமல்லாமல் சிறுவர்கள் டீனேஜர்ஸ் இளைஞர்கள் மற்றும் வயோதிக வயதினரையும் மன அழுத்தம் விட்டு வைக்கவில்லை.
மன அழுத்தத்தின் போது (Cartisol)கார்டிசோல் மற்றும் (Adrinaline) அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன, இவை இதயத்துடிப்பை அதிகரிக்கின்றன, ரத்த அழுத்தத்தை உயர்த்துகின்றன, மற்றும் தசை இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன இந்த மாற்றங்கள் நீண்ட காலத்திற்கு நீடித்தால் பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தத்தை கையாள்வது என்பது ஒரு வாழ்க்கை முறை மாற்றம்,இதற்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது பொறுமையுடனும் முயற்சிவுடனும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றும் போது நல்ல பலன் கிடைக்கும்.
மன அழுத்தத்திற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது ஆகும் :-
உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் என்டோர் பின்ஸ் (Endorphins ) என்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன இவை மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி சைக்கிளிing நீச்சல் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
தூக்கம் மிகவும் அவசியம் ஒரு நாளைக்கு ஏழு அல்லது எட்டு மணி நேரம் தடையற்ற தூக்கம் அவசியம். தூக்கம் இன்மை கார்டிசோல் ஹார்மோனின் அளவை அதிகரித்து Para அழுத்தத்தை மேலும் மோசமாக்கும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மொபைல் போன் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து ஒரு புத்தகத்தை படிப்பது அல்லது அமைதியான இசையை கேட்பது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
யோகாவில் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மிகவும் அவசியம். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் தியானம் ஆகியவை மனதை ஒருமுகப்படுத்தி நிகழ்கால தருணத்தில் கவனம் செலுத்த உதவுகின்றன தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் அமைதியான இடத்தில் அமர்ந்து மூச்சு உள் இழுப்பதையும் வெளிவிடுவதையும் கவனிப்பது மனதை அமைதிப்படுத்த உதவும். இது (Mindfulness) என்று அழைக்கப்படுகிறது.
உற்ற நண்பர்களிடமும் நம்பிக்கையானவர்களிடமும் உங்கள் உணர்வுகளையும் பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். சமூக ஆதரவு ஒரு பாதுகாப்பு உணர்வை அளித்து நீங்கள் தனியாக இல்லை என்ற உணர்வை உருவாக்கும். நீங்கள் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இடம் மிகவும் குழப்பமானதாகவும் இரைச்சலாகவும் இருந்தால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கும். உங்கள் இடத்தை சுத்தமாக நேர்த்தியாக வைத்துக் கொள்வது ஒரு சிறிது நேரம் இயற்கையுடன் செலவிடுவது பூங்காக்களுக்கு செல்வது போன்றவை மனதை அமைதிப்படுத்தும் வழிவகைகள் ஆகும்.
மன அழுத்தம் என்பது ஒரு பலவீனம் அல்ல அதை முறையாக கையாள்வதன் மூலம் நாம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.
இயற்கை அளிக்கும் ஒவ்வொரு அசைவிலும் வாழ்வின் அமைதியை உணர முடிகிறது எதையும் கடக்க பழகுங்கள் ஏனெனில் காலம் மிகவும் குறைவுதான்.
(Life is very short)
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
(A life without disease is complete wealth)
திவன்யா பிரபாகரன்

