இரவில் மொபைலை நோண்டியபடி விழித்தே கிடக்கிறீர்களா? அப்ப இது உங்களுக்கு தான்….! | தனுஜா ஜெயராமன்

இப்போதெல்லாம் நாம் பலரும் தூங்கவே இரவு இரண்டு மணி வரை ஆகிறது. இரவில் மங்கிய ஒளியில் கண்களை சுருக்கிக் கொண்டு செல்போனை முறைத்தபடி விழித்து கிடக்கிறோம். இது கண்களுக்கு மட்டுமல்ல உடலின் மெட்டபாலிஸங்களுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் யாரும் கேட்பதாகத்தான் இல்லை. இரவில் நீண்ட நேரம் விழிப்பதால் உடலில் பல்வேறு ப்ரச்சனைகள் அதிகம் ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.. அதை பற்றி தெரியணுமா? அப்ப இதை முழுவதுமாக படிங்க…

🔴 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

🔴 ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴 விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴 விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴 காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴 முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴 பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴 பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴 இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴 இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴 இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴 இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப் பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!