கிரிக்கெட்டில் டைம் அவுட் முறையில் பரிதாபமாக வெளியேறிய போட்டியாளர் ! டைம் அவுட் குறித்து தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக மேத்யூஸ்
டைம் அவுட் முறையில் பரிதாபமாக வெளியேறியது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் அடுத்து ஆட உள்வரும் பேட்ஸ்மேன் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுக்கும் போது அவர் டைம் அவுட் முறையில் அவுட் செய்யப்படலாம். இது குறித்து நிறைய பேருக்கு தெரியாது. அதுவும் உலக கோப்பையில் இது மாதிரி அவுட் செய்யப்படும் முறை இதுவே முதல் முறை என்பதால் பலரும் ஆர்வமுடன் இதனை பேசுகிறார்கள்.
இலங்கை அணியில் மூன்று விக்கட் இழந்து தடுமாறிய போது சரித் அசலங்கா மற்றும் சதிரா இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை அணியை மீட்க ஆரம்பித்தார்கள். ஓரளவுக்கு அவர்கள் சரிவிலிருந்து இலங்கை அணியை மீட்டவேளையில் சதிரா ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் இலங்கை அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் விளையாடுவதற்கு உள்ளே வந்தார். வந்தவர் முதல் பந்தை சந்திக்க சென்று, ஆனால் அதற்குள் கிரிஸில் இருந்து நகர்ந்து வந்து, ஹெல்மெட் சரி இல்லை, வேறு ஹெல்மெட் வேண்டுமென வெளியில் இருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் அவர் விதியை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவர்களிடம் கூறி அவுட் கேட்டார். சிறிது நேரம் சலசலப்புக்குப் பிறகு நடுவர்கள் அவுட் கொடுக்க, டைம் அவுட் முறையில் பரிதாபமாக உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக மேத்யூஸ் வெளியேறினார். பாவம் தான்!!!