கசப்பு அல்வா கொடுத்த கமல்! தனுஜா ஜெயராமன்
ஞாயிற்றுகிழமை எபிசோடில் கமல், ஸ்வீட் லட்டு, கசப்பான அல்வா என்ற டாஸ்கை ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தார்.
இதில் அர்ச்சனா ஸ்வீட் லட்டுவை விஷ்ணுவுக்கும், கசப்பான அல்வாவை மாயா, பூர்ணிமாவுக்கும் கொடுத்தனர். தினேஷ் ஸ்வீட் லட்டுவை, கூல் சுரேஷுக்கும் கசப்பான அல்வாவை மாயா, பூர்ணிமாவுக்கும் வழங்கினார். இவர்கள் இருவரும்தான் அதிகமான கசப்பான அல்வாவை பெற்றனர். அழுமூஞ்சி பொண்ணு என அர்ச்சனாவும் கசப்பு அல்வா பெற்றார்.
பின்னர் மாயா பூர்ணிமாவை கொஞ்சமாக வைச்சி செய்தார் கமல். இரண்டாம் முறை தலைவரான பூர்ணிமாவின் தலைமையில் மமதை ஏறிக்கிடப்பதை சுட்டி காட்டுவது போல அரசியல் தலைமைகளை சூசகமாக சுட்டி தனது அரசியலையும் பிக்பாஸில் புகுத்தி விளையாடினார் கமல்.
வெளிப்படையான நாமினேஷன் பேச்சுக்கள் போட்டியின் சுவராஸ்யங்களை குறைப்பதாக கூறி இனி நாமினேஷன் குறித்து வீட்டில் யாரும் பேசக்கூடாது என தடை விதித்தார் ஆண்டவர். எப்படியும் ரகசியமாக பேசத்தான் போகிறார்கள் இந்த விஷபாட்டில்கள் என்பது வேறுவிஷயம்.
இங்க வந்த முதல் நாளில் இருந்தே என்னை சுமால் பாஸ் வீட்டிற்குள் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள். எனக்கு பிக்பாஸ் வீட்டிற்கு போகவேண்டும், அது எப்படி இருக்கு என்றே எனக்கு தெரியாது, எல்லார் மாதிரியும் நானும் டாஸ்கில் விளையாட வேண்டும் எனக்கு வரண்டா புல்வெளியில் படுத்து உருள வேண்டும், என்று குழந்தைகள் அடம்பிடிப்பதைப்போல அழுது புலம்பி திரிந்த அர்ச்சனாவை கமலும் சர்காஸமாக கிண்டல் செய்தார்.
ஆனாலும் தொட்டா சிணுங்கியாக வலம் வருகிறார் அர்ச்சனா. எதற்கெடுத்தாலும் மூக்கை சிந்துகிறார், கண்ணை கசக்குகிறார். இப்பவே வெளியே போகணும்னு கேமிரா முன்னாடி புலம்பி அழுது வருகிறார். இவருக்கும் கமல் ஒரு குட்டு வைத்தார். பார்க்கலாம் அர்ச்சனா எவ்வளவு நாள் தாக்கு பிடிப்பார் என்று…