1 min read

பவதாரணி பெயரில் சிறுமிகள் இசைக்குழு – இசைஞானி அறிவிப்பு..!

தனது மகள் பவதாரணியின் பெயரில், சிறுமிகள் அடங்கிய இசைக்குழுவை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா… மஸ்தானா… பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதே போல் அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, பிரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார். […]

1 min read

‘குடும்பஸ்தன்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்..!

மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். […]

1 min read

இசையமைப்பாளர் தேவாவின் அதிரடி அறிவிப்பு..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா. தற்போதும் இவருடைய பாடல்கள் படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும்நிலையில், தன்னுடைய பாடல்களை பயன்படுத்தினால் அதற்காக காப்பி […]

1 min read

நடிகர் சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை..!

ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக அவரது மகன் ராம் சரண் இருந்து வருகிறார். ராம் சரண் ராஜமவுளி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். ராம் சரண் உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு பெண் […]

1 min read

‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை..!

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது. தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக […]

1 min read

“ஸ்வீட்ஹார்ட்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

ரியோ நடித்த “ஸ்வீட்ஹார்ட்” படம் மார்ச் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான ‘ஜோ’ திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் […]

1 min read

‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார். ஜென்டில்வுமன் […]

1 min read

நடிகர் கவுண்டமணியின் “ஒத்த ஓட்டு முத்தையா” டிரெய்லர் வெளியானது..!

நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, […]

1 min read

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளியானது..!

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நவீன காதலை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த ஜன.14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் […]

1 min read

‘ஆர்யன்’ படப்பிடிப்பு நிறைவு..!

விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,ராட்சசன்,கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் […]