தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும் நடிகை நித்யாமேனன்

தமிழில், 180, மாலினி 22 பாளை​யங்​கோட்​டை, காஞ்​சனா 2, ஓ காதல் கண்​மணி, மெர்​சல், திருச்​சிற்​றம்​பலம் உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடப் படங்​களில் நடித்து வருகிறார்.

‘திருச்​சிற்​றம்​பலம்’ படத்​தில் நடித்​தற்​காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அவர், இப்​போது தயாரிப்பு நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறு​வனத்​துக்கு ‘கியூரி புரொடக் ஷன்’ என்று பெயர் வைத்​துள்​ளார்.

“நான் நடிக்​கத் தொடங்​கிய முதல் நாளி​லிருந்தே இது எனது நோக்​க​மாக இருந்து வரு​கிறது. இப்​போது ஒரு தயாரிப்​பாள​ராக, நான் அதே நோக்​கத்​துடன் தொடர்வேன். நான் தயாரிக்​கும் படங்​கள் மூலம் பார்வையாளர்​களிடம் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வதே எனது குறிக்​கோள்” என்று கூறி​யுள்ள அவர், தனது முதல் தெலுங்கு படமான ‘ஆலா மொதலிந்​தி’​யின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!