“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா

புதுச்சேரி குமுதம் அறக்கட்டளை, புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழு இணைந்து தயாரித்த“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா கடந்த 12-05-2026(செவ்வாய்) அன்று நடைபெற்றது. புதுச்சேரிக்கு அருகில், குயிலாப்பாளையம் – ஆரோவில் (தாமரைக் குளம் எதிரில்), யாத்ரா தியேட்டரில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தது.

புதுச்சேரி அரசு, ஆணையர் மற்றும் அரசு துறைச்செயலர், டாக்டர் திருமதி அ. முத்தம்மா, இ.ஆ.ப. அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,“சமுதாய விதைகள்” எனும் குறும்படத்தை வெளியிட்டார். அத்துடன், இக்குறும்படத்தைப் பார்வையிட்டு, வாழ்த்துரையும் வழங்கினார். அப்போது, இன்றைய காலத்து மாணவமணிகளுக்கு, சமூகத்திற்குத் தேவையான ஒரு கருத்தை, இக்குறும்படம் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், இயக்கம் முதல் நடிப்பு வரையில் தங்களின் பங்களிப்பை நல்கிய அனைவரையும் குறிப்பிட்டு, பாராட்டிப் பேசினார்.

தேசிய நல்லாசிரியர், கலைமாமணி ப. முருகேசன் அவர்கள், கதை, வசனம் மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றிய, இந்தச்“சமுதாய விதைகள்” எனும் இக்குறும்படத்திற்குத் திரைக்கதை எழுதியும் இயக்கமுமாக, யாத்ரா ஸ்ரீநிவாசன் அவர்கள் பங்கேற்றுள்ளார்.

புதுச்சேரி குமுதம் அறக்கட்டளை, புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழுவின் உறுப்பினர்கள், கலையார்வலர்கள், பொதுமக்கள் எனப் பல்லோரும் கலந்துகொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தார்கள். இவ்வாறாக,விழா இனிதே நிறைவுற்றது.

நெஞ்சார்ந்த வணக்கங்களுடன்,

கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

நாள்: 17-05-2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!