வெளியானது “கருப்பு” பட டிரெய்லர்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் டிரெய்லர் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் மிகவும் நேர்த்தியாகவும், ரசிகர்களைக் கவரும் வகையிலும் தயாராக உள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் மாற்றத்தில் ஒரு தெளிவு பிறந்தவுடன், டிரெய்லர் வெளியிடப்படும்.நல்லது நடக்கும் வரை காத்திருப்போம்” என படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.

சூர்யாவுடன் திரிஷா இடம்பெற்ற “கருப்பு” படத்தின்புதிய போஸ்டர் நேற்று வெளியானது.

இந்த நிலையில், சூர்யாவின் ‘கருப்பு’ பட டிரெய்லர் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!