பீரியட் கால கதையாக உருவான இந்தத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பீரியட் கால கதையாக உருவான இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தாலும், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இந்த படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
