பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!!
பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!!
உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு நீங்க தினமும் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை..
கால்சியம் பற்றி நம் அனைவருக்கும் பொதுவான அறிவு இருக்கிறது. பாலில் கால்சியம் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் உடலில் கால்சியம் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, பல் பிரச்சனை, எலும்பு பிரச்சனை போன்றவை ஆகும்
ஆனால் பாலை விடவும் கால்சியம் அதிகம் உள்ள சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான கால்சியம் நிச்சயமாக கிடைக்கும். அத்தகைய சில உணவுகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..
தயிரில் கால்சியம் சத்து உள்ளது. சொல்ல போனால் இதில் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. நீங்கள் விரும்பினால், இதனுடன் சில பழங்களை சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக, இனிக்காத தயிர் சாப்பிடுவது தான் அதிக நன்மை பயக்கும்.
ஆரஞ்சு ஜூஸ்: சிலருக்கு பால் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். காரணம் இதில் கால்சியம் சத்து நிறைந்து இருக்கு. ஆனால், நிபுணர்கள் கூற்றுப்படி, எந்த ஒரு ஜூஸையும் ஒரு நாளைக்கு 10 அவுன்சுக்கு மேல் குடிக்க கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஓட்ஸ் பால்: பசும் பாலுக்கு மாற்றாக நீங்கள் தேடுகிறீர்களானால், ஓட்ஸைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம். இதில் கால்சியம் நிறைந்துள்ளது. வீட்டில் ஓட்ஸ் பால் ஒரு நல்ல தேர்வாகும். ஆனால் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, ஓட்ஸ் பாலில் அதிக சத்துக்கள் இல்லை.
பாதாம் பால்: பாதாமில் கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. ஒரு கப் பாதாம் பாலில் பசுவின் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. இதை நீங்கள் எடுத்து கொள்ளும் போது கவனிக்க வேண்டியது என்னவென்றால்,
ஒரு கைப்பிடி பாதாம் பருப்பில் 13 கிராம் புரதமும் உள்ளது.
சோயா பால்: சோயா பாலில் பசுவின் பாலில் உள்ள அளவுக்கு கால்சியம் உள்ளது. இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 6 கிராம் புரதம் உள்ளது. இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. எனவே, இதை பசும் பாலுக்கு பதில் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான கால்சியம் நிச்சயமாக கிடைக்கும்.