யாதுமாகி நின்றவள் பெண்ணே

யாதுமாகி நின்றவள் பெண்ணே


அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றே//

தடுத்து வைத்திட்டார் முன்னொரு காலத்தில்//

உயர்கல்வி பெற்றே உயர்ந்தார் பெண்டீர்//

உயர்பதவியும் அடைந்தே வையத்தில் சிறந்தார்//

தலைமை அமைச்சராக நாட்டையும் நடத்தி//

தலை நிமிர்ந்து நின்றாரே பலர்//

உள்ளூர் மட்டுமன்றி உலகச் சபையினிலும்//

முக்கிய பதவியில் முன்னேறி முடிசூடினர்//

சரிசமமாய் பதவிகளை அடைந்தே சகலற்கும்//

புரியவைத்தார் நிர்வாகத் திறமைகளில் உயர்ந்தே//

உவ‌மையேதும் இல்லாத‌தாய்
பெண்மையின் தாய்மை//

இல்லையெனில் ஏது
ஆண்மையின் ஆளுமை//

மஞ்சுளா யுகேஷ். துபாய்

S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!