தமிழ்நாட்டின் குகேஷ் செஸ் உலகில் மாபெரும் சாதனை.. விசுவநாதன் ஆனந்த் சாதனை முறியடிப்பு
: ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் கனடாவில் நடைபெற்றது. இந்த தொடரில், இந்தியாவின் சார்பில் 17 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 9/14 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, 2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அது மட்டுமின்றி, செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக இந்த தொடரில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறும் வகையில் இந்த செஸ் தொடர் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்தப் தொடரின் 14ஆவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் கிஹாரு நகமுரா மோதினர். இந்த சுற்றின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகள் பெற்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதன் மூலமாக முதல் முறையாக முகேஷ் ஃபிடே கேண்டிடேட்ஸ் பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்த தொடரில் முகேஷ் வெற்றி பெற்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார். அத்துடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கு தகுதியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் சாம்பியனான குகேஷிற்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதே போல தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்.