மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் நேர்காணல்.
Indian council of medical research (ICMR) அதன் ஒரு பகுதியான காசநோய்க்கான ஆராய்ச்சிப் பிரிவில் அதில் காசநோய் மருத்துவராகவும் நியூராலாஜிஸ்ட்டாகவும் ICMRல் பணி புரிந்தார். மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன், இவர்கள் பணி ஓய்வு பெற்றபின்னும் நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்சன் வியாதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவை செய்து வருகிறார். காமாட்சி மருத்துவமனையில் ஆலோசகர், ,அன்னைபாலா ஹீலிங் செண்டர் பழவந்தாங்கலில் பார்க்கின்சன் நோயாளிகளை கவனிப்பவர்களுக்கான கன்சல்டண்ட் என 70 வயதுக்கு மேலும் தளர்வில்லாமல் உழைக்கிறார் அது மட்டுமன்றி பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்காக
”நடுக்குவாத நோயாளிகளின் கவனிப்பாளர்களுக்கான பயிற்சி கையேடு” எனும் நூலையும் எழுதியுள்ளார். இவரை மின் கைத்தடிக்காக சந்தித்தோம்.
எத்தனை வருடமாக மருத்துவ துறையில் இருக்கிறீர்கள்?
1970 லிருந்து மருத்துவத்துறையில் இருக்கேன் நரம்பியலில் 1975 லிருந்து இருக்கேன் நரம்பியல் நோயாளிகளுக்கு என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்று உந்துதல் எனக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் சமீபத்தில் பார்க்கின்சன் சம்பந்தமா ஒரு புத்தகம் கூட எழுதினேன்.
பணி ஓய்வுக்குப் பின் கவனம் மற்றும் செயல்பாடுகள் பார்க்கின்சன் நோயளிகள் மீது திரும்பக் காரணம்?
நரம்பியல் எடுத்துக்கிட்டீங்கன்னா தலைவலி பிட்ஸ் போன்றவை திடீரென வரும் பிறகு சில நாள் ஏதும் இல்லாமல் இருக்கும் எப்போதாவது வரும் போகும்.
பக்கவாதம் எடுத்துக்கிட்டீங்கன்னா அந்த ஸ்ட்ரோக் வந்து ஒரு ஆறு மாசம் ஒரு வருஷத்துல படிப்படியா குணமாகும். நான் கவனம் செலுத்துவது Degenerative disorder அதாவது மூளை படிப்படியா அதனுடைய குணங்களை இழந்து ஒரு வெஜிடபிள் மாதிரி ஆகிறது தான்
நல்ல வாழ்ந்தவங்க திடீரென பேச வராம கால் வராம அடுத்தவங்கள depend செய்து வாழ வேண்டி இருக்கும் பொழுது அது மிகவும் கொடுமை progressive degenerative disorders அந்த மாதிரி பேஷண்ட்ஸ் மேல் தான் நான் என் கவனத்தை செலுத்துகிறேன்.
நான் ஒர்க் பண்ணது ரிசர்ச் சம்பந்தப்பட்டது அதுல காச நோயாளிகளுக்கு உடல்நிலை எவ்வாறு எல்லாம் பாதிக்குது தண்டுவடம் எப்படி பாதிக்கிறது மூளை எப்படி பாதிக்குது இப்படி படிச்சிட்டு இருக்கணும் 2008 வரை இப்படித்தான்
அதன் பிறகு நான் மீண்டும் நரம்பியல் துறைக்கு வந்த போது இந்த பார்க்கின்சன் நோயாளிகள் படும் கஷ்டங்களை பார்த்து நான் அவங்களுக்கு ஏதாவது செய்யணும் என முடிவெடுத்தேன்.
பார்க்கின்சன் நோயாளிகள் துணையோடு தான் வாழ வேண்டிய கட்டாயம் எப்படி இருக்கையில் எத்தனை பேருக்கு அப்படி ஒருவரை தன்னுடன் வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது அவர்களுக்கு என்ன வழி?
துணை என்று நான் சொல்வது வேறு யாரையும் இல்லை அது அவருடைய மகன் இருக்கலாம் மகளா இருக்கலாம் கணவரா அல்லது மனைவியாக கூட இருக்கலாம் தன்னுடைய வேலையை விட்டு அடுத்தவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கு. இன்றைய காலகட்டத்தில் மக்கள் பணம் கேட்டா கூட கொடுத்துடுவாங்க போல இருக்கு ஆனா யாருக்கும் நேரமில்லை.
தன் வேலையும் பார்த்துக் கொண்டு பார்க்கின்சன் பாதிப்பு உள்ளவரை கைப்பிடித்த அழைத்துப் போவது, ஷேவ் பண்ணி விடுறது, குளிக்க வைக்கிறது, தேவையான உதவிகளை செய்யறது, அதுவும் வருடக் கணக்கில்..இது மிகப்பெரிய சவால். அப்படி கவனிப்பவர்களுக்குத்தான் எங்களுடைய அறிவுரை தேவைப்படுகிறது
பார்க்கின்சன் பாதிப்பு உள்ளவர்கள் மருந்திலிருந்து முழுமையாக விடுபட முடியுமா?
மருந்துகள் இல்லாமல் முடியாது இருந்தாலும் அதையும் தாண்டி அவர்களுடைய quality of life improve செய்வதற்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுதான் எங்கள் நோக்கம்.
இதுக்காக சப்போர்ட் குரூப் உருவாக்கி இருக்கிறோம், அதில் சந்திப்புகள் ஏற்பாடு செய்வோம். நோயாளியை பாத்துக்குறவங்களும் வருவாங்க. பிசியோதெரபி போன்ற சில அமர்வுகள். இருக்கு அப்போது அவர்களுடன் பல வகையிலும் கலந்து பேசுவோம்.
பலர் ஒன்றாக கூடுவதால் ஒருவருடைய பிரச்சினைகளை சமாளிக்கும் விதத்தை மற்றவர் அறிந்து கொள்ள முடிகிறது.
பார்க்கின்சன் சம்பந்தமாக நீங்க ஒரு புத்தகம் எழுதியதாக சொன்னீங்க அதை பத்தி சொல்ல முடியுமா ?
ஆமாம், அந்த புத்தகம் முக்கியமா நோயாளிகளின் உடன் இருக்கும் கவனிப்பவர்களுக்காக எழுதப்பட்து.ட
மருந்துகள் என்னதான் முக்கியம் என்றாலும் , நாங்கள் தரும் அறிவுரைகளை பின்பற்றி பலர் சாப்பிடும் மருந்துகளின் அளவை வெற்றிகரமாக குறைத்து இருக்கிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருதாக நான் நினைக்கிறேன்
பொதுவாக எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் கூறும் அறிவுரை என்ன ?
நான் முக்கியமா மூணு விஷயங்களை சொல்லுவேன்
ஒரு முறையான வாழ்க்கையை திட்டமிடணும்.
குறிப்பிட்ட அளவு நடக்கணும் குறிப்பிட்ட அளவு சாப்பிடணும்
அறைக்குள் ஒடுங்கிப் போகாமா நல்ல நண்பர்களோட நம் நேரத்தை செலவிடணும்
நிறைய பேர் வயசானாலே ஒரு அறையில முடங்கிடுறாங்க அருகில் இருப்பவர்கள் கிட்ட பழகணும். வாய்விட்டு பேசணும் இதெல்லாம் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்
மனம் விட்டு பாடலாம் பேசலாம் பலூன் ஊதுறது மூச்சுப் பயிற்சி செய்யறது இதெல்லாம் நுரையீரலைப் பாதுகாக்கும். நடைப்பயிற்சி முக்கியம் .யோகா செய்யலாம்.எல்லாத்துக்கும் மேல மனசுல தோய்வு ஏற்படாமல் நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்களின் தொடர்பு என பழகுவது ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் . எனும் மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன்.
வழக்கமான செயல்களிலே இருந்திடாம புதிய புதிய செயல்களில் ஈடுபட்ட மனசு புத்துணர்ச்சியுடன் இருக்கும் . புதுசா மொழியை கற்றுக்கொள்ளலாம், கோலம் போடலாம், ஏன் ஊறுகாய் கூட போடலாம் ஆனா மூளையை ஆக்டிவா வச்சுக்கணும். நம்ம மூளையில எத்தனையோ நரம்புகள் பின்னி படர்ந்து இருக்கு. ஒரு ஜீனியஸ் கூட அவருடைய மூளையில இரண்டு சதவீதத்தை தான் பயன்படுத்துறாரு. அப்படி என்றால் நாம பணத்த பேங்க்ல வைக்கிற மாதிரி மூளையில் எதையும் யூஸ் பண்ணாம அப்படியே வைக்கிறதுல என்ன இருக்கு
நாம கத்துக் கொடுக்கலாம் கத்துக்கலாம் நாலு பேருக்கு உபயோகமா நம்ம வாழ்க்கை வாழலாம்,
என நமக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார் நரம்பியல் நிபுணர், மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் MBBS, MD,DM PHD