‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை

புதுடெல்லி: சிலிண்​டர்​களை பதுக்​கு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: மத்​திய கிழக்கு நாடு​களில் ஏற்​பட்​டுள்ள போ​ரால் இந்​தி​யா​வில் எரிபொருள் நெருக்​கடி கவலைக்​குரிய விஷய​மாகவே நீடிக்​கிறது. எனினும், சமையல் எரி​வாயு (எல்​பிஜி) விநி​யோகம் தொடர்​பாக பொது​மக்​கள் அச்​சமடை​யத் தேவை​யில்​லை. அதேநேரம் எரி​வா​யுவை சிக்​க​ன​மாகப் பயன்​படுத்த வேண்​டும். மாற்​றாக, சமையலுக்கு மின்​சா​ரம் உள்​ளிட்ட இதர எரிசக்தி ஆதா​ரங்​களைப் பயன்​படுத்​து​வது கூடு​தல் நலம் பயக்​கும்.

தற்​போது எந்​தவொரு விநி​யோகஸ்​தரிட​மும் கையிருப்பு இல்​லாத நிலை ஏற்​பட​வில்​லை. வீடு​களுக்​கான சிலிண்​டர் விநி​யோகம் வழக்​கம்​போலவே நடை​பெற்று வரு​கிறது. வணிக ரீதியி​லான எல்பிஜி விநி​யோகம் தொடக்​கத்​தில் முழு​மை​யாக நிறுத்தப்பட்டிருந்​தா​லும், தற்​போது பகுதி அளவில் சீரமைக்கப்பட்டுள்​ளது. வணி​கப் பயன்​பாட்​டாளர்​கள் படிப்படியாகக் குழாய் வழி இயற்கை எரி​வா​யுவுக்கு மாற வேண்டும்.

எரி​வாயு சிலிண்​டர்​களைப் பதுக்​குபவர்​கள் மற்​றும் கறுப்​புச் சந்தை​யில் விற்​பனை செய்​பவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த சில நாட்​களில் நாடு முழு​வதும் 12,000-க்​கும் மேற்​பட்ட சோதனை​கள் நடத்தப்பட்டுள்​ளன. இதில் சுமார் 15,000 சிலிண்​டர்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு சுஜா​தா தெரி​வித்​தார்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!