குத்தாலம் ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவர் தோள் நோக்கம். திருவாசகம். மனித வாழ்க்கைக்குக் கவசம் மிக முக்கியமானது. வாழ்வின் இடர்பாடுகளிலிருந்து நம்மைக் காக்க இறைவனின் கவசப் பாடல்கள் இருப்பதுபோல் நம் உடலின் கவசம் தோல். தோலின் பணி அசாத்தியமானது. வெளிப்புற சுற்றுச் சூழலில் இருந்து நம்மைக் காப்பது தோலே. நம் உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை […]Read More
Tags :ஆன்மீகத் தொடர்
24. திருவெண்ணியூர் ஸ்ரீ கரும்பேஸ்வரர் ஒருவனே போற்றி யொப்பி ஒப்புஇல் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்தே போற்றி வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. —-திருவாசகம் வார்த்தைகளில் இனிப்பை விரும்பும் நாம் உடலில் இனிப்பு இருப்பதை விரும்புவதில்லை. அதைக் குறைக்க விரும்புகிறோம். அதற்காக என்னென்னவோ வைத்திய முறைகளைப் பின் பற்றுகிறோம். மருத்துவர்களைத் தேடி ஓடுகிறோம். மாறுபட்ட வாழ்க்கை முறை, […]Read More
23. திருநின்றவூர் ஸ்ரீ இருதயாலீஸ்வரர் பண்டாய நான்மறையும் பாலணுகா மாலையனுங் கண்டாரு மில்லைக் கடையேனைத் – தொண்டாகக் கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே யுண்டாமோ கைம்மாறுரை. திருவாசகம் இறைவன் உறையும் இடம் இதயம் என்கின்றன வேதங்கள். ஆழ்ந்த நம்பிக்கையுடன், இதயத்தில் இறைவனை நிறுத்தி, நாம் பக்தி செய்தால் வேண்டுவன எல்லாம் தருவான் ஈசன் என்பது வேதங்கள் கூறும் பக்தி மார்க்கம். ஹோமம் வளர்ப்பதோ, பூஜை செய்வதோ முக்கியமில்லை. அவற்றைப் பக்தியுடன் செய்ய வேண்டும். என்னை மனதில் நிறுத்தி […]Read More
22. திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் தேவ தேவன் மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன் மூவராலும் அறி ஓணா முதலாய ஆனந்தம் மூர்த்தியான் யாவர் ஆயினும் அறி ஓணா மலர்ச் சோதியான்தூய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே. திருவாசகம். “மருந்தென்பது மாமலர்ச் சோதியான் அடிமலரே” – என்கிறது திருமுறை. மருத்துவர்கள் வைத்தியம் பார்த்தாலும் மருந்து செயல்படுவது இறைவன் கருணையால் மட்டுமே. அவன் கருணை இருந்தால் மட்டுமே மருந்துகள் ஓர் உடலில் செயல்பட ஆரம்பிக்கும். ஆனால் இறைவன் […]Read More
ஸ்ரீ கம்பகரேஸ்வரர், திருபுவனம். விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய வன்புரை என்புருக்கும் பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே —திருவாசகம் பயம் எதனால் வருகிறது? பயம் என்பது பொதுவான விஷயம். அது ஏன், எப்படி வருகிறது என்பது தெரியாது. அதீத மன அழுத்தம், நினைத்தது நடக்காததன் தோல்வி உணர்வு எல்லாமே பயத்திற்குக் காரணம் ஆகிறது. அழியும் இந்த உடலுக்குள் அளவற்ற ஆசைகள். ஒன்று […]Read More
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர் முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள் செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழி தருமே -திருவாசகம் ஆனந்தம், நிம்மதி என்பது என்ன? அது பணத்திலோ பொருளிலோ இல்லை. மனத்தில் உள்ளது. எவரையும் சார்ந்து அது வருவதில்லை. உண்மையோடு இணைந்திருக்கும்போது அது தானாகவே வரும். உண்மை என்பது மாறாத நிலை. எதுவும் நிரந்தரமில்லை. […]Read More
19. தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்தம் மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் ஒத்தன் ஒத்தன சொல்லிட ஊரஊர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுமே –திருவாசகம் மறுபிறவி என்று ஒன்று உண்டா? காலம் காலமாக, யுகம் யுகமாக எழும்பிக் கொண்டிருக்கும் கேள்வி இது.. பிறப்பும், இறப்பும் என்ற சுழலில் சிக்கி, துன்பத்தில் அல்லலுறும் ஜீவன்கள் அதிலிருந்து மீள, பிறவியே […]Read More
18. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா விதி அடியேனை விடுதி கண்டாய் வெள் தலை முழையில் பதி உடைவாள் அரப் பார்த்து இறை பைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே. திருவாசகம் சென்றது மீளுமோ? வாழ்வில் கடந்து சென்ற எதுவும் மீளாது. இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆட்டம். இதில் கடந்து சென்றவைகளை மீண்டும் அடைய முடியாது. ஆனால் அவற்றின் தாக்கம் நம் வாழ்வில் […]Read More
17. தீர்த்தனகிரி ஸ்ரீ சிவக்கொழுந்தீஸ்வரர் ஊசலாட்டும் இவ்வுடல் உயிர் ஆயின இருவினை அறுத்து என்னை ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன் உணர்வு தந்து ஒளியாக்கி பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெருங்கருணையால் ஆசை தீர்த்து அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே –திருவாசகம் நம் வாழ்க்கைப் பாதை எங்கே செல்கிறது? நீண்டு செல்லும் அப்பாதையில் எங்கே போகிறோம் என்று தெரியாமல்தான் பயணம் நடக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் என்று […]Read More
16. திருநல்லூர்ப் பெருமணம் ஸ்ரீசிவலோகத் தியாகேசர் இப்பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி இணை காட்டி அப்பன் என்னை வந்து ஆண்டு கொண்டு அருளிய அற்புதம் அறியேனே.” திருவாசகம். காதல் என்பது என்ன? மனிதர்களுக்குள் தகுதி பார்த்து, அழகு பார்த்து எதோ ஒரு எதிர்பார்ப்புடன் வருவது அல்ல காதல். உண்மையான […]Read More