1 min read

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம்

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம் இன்று 5th December 💐 ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை (நம்மை இல்லீங்க்க) பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது எல்லையில்லாத காதல் மனிதருக்கு.ஆம்புலன்ஸ் டிரைவராக உலகப்போர் சமயத்தில் இளைஞனாக டிஸ்னி கலந்து கொள்ள போன பொழுது அவரின் வண்டி முழுக்க விலங்குகள் விதவிதமான வடிவங்களில் வரையப்பட்டு இருக்கும் அது அவரை உந்தித்தள்ளியது . தொடர்ந்து […]

1 min read

10 வயதில் 12 உலக சாதனைகள் – சிறுவன் கிருஷ்வா கஜபதி!

10 வயதில் 12 உலக சாதனைகள் / சிறுவன் கிருஷ்வா கஜபதி! பள்ளி செல்லும் வயதில் 12 உலக சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 10 வயது சிறுவன் கிருஷ்வா கஜபதி. விளையாட்டில் எந்தவித பின்னணியும், அறிமுகமும் இல்லாத சிறுவன் கிருஷ்வா தனி ஒருவனாக விளையாட்டு துறையில் சாதிக்க ஆர்வமுடன் களம் இறங்கி உள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் மகனான கிருஷ்வா மந்தைவெளியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயதில் […]

1 min read

தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்

தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு 6 மாதக் குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது இந்த சொட்டு மருந்து இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு

1 min read

தொடங்கியது ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்பினி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மேடையில் அவர் உரையாற்றியபோது:- தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, மஞ்சள்காமாலை, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. ” இந்த தடுப்பூசி திட்டமானது இந்திய முழுவதும் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. […]

1 min read

மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை  வழங்கும் பள்ளி 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்றுவரும் இளம் வயது மாணவர்களுக்குக் கல்வியை அனுபவத்தோடு கற்றுக் கொடுத்து வருகிறார்கள். கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் மறக்காது. வாழ்க்கையில் என்றுமே மறக்கக் கூடாது என்ற நோக்கில்தான் வாழ்க்கைக்குத் தேவையான இடங்களுக்குக் களப்பயணம் அழைத்துச் செல்கின்றனர்.களப்பயணம் அழைத்துச் செல்வது தொடர்பாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறியதாவது: கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு களப்பயணம் செல்லுதல் : “மாணவர்கள்  களப்பயணம் செல்லும்போது  நேரடியாக வாழ்க்கைக்கான […]

1 min read

குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்

சமீபத்தில், காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூன்று வயது குழந்தையின் வயிற்றில் இருந்து 23 சிறிய காந்தப் பந்துகளை அகற்றினர். இந்த விளையாட்டுப் பொருள்கள் குடலில் ஐந்து துளைகளை ஏற்படுத்தியது, அதை சரிசெய்ய 4 மணிநேர அறுவை சிகிசிச்சை தேவைப்பட்டது. அதனால் குழந்தைகள் தேவையற்ற பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தை மருத்துவர்கள் பெற்றோரை எச்சரிக்கின்றனர் குறுநடை போடும் குழந்தை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் அத்தகைய பொருட்களை […]

1 min read

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டு செயற்கைக்கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிகரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் […]

1 min read

குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தைஅறிமுகப்படுத்தும் விளையாட்டுச் சாதனம்

சரண்யா குமார் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாதனத்தைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறார். அது பற்றி அவரிடம் பேசியபோது அவர் அளித்த பதில் இங்கே. பண்டைய இந்திய கலாசாரம் மற்றும் ஞானத்தை நம் குழந்தைகளுக்கு தொடர்புபடுத்தக்கூடிய மற்றும் வேடிக்கையான வழிகளில் எடுத்துச் செல்வதே ‘சித்தம்’ விளையாட்டுச் சாதனத்தின் நோக்கம். இன்றைய குழப்பமான உலகில் நம் குழந்தைகள் செல்லும் பாதையில் இந்த விளையாட்டு சாதனம் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய கலாச்சாரம்-அதன் நாட்டுப்புறக் கதைகள், கலை வடிவங்கள் மற்றும் மதிப்புகள்-நம் […]

1 min read

பல் மருத்துவத்தில் தவறான நம்பிக்கையும் சரியான காரணங்களும்

இன்றைய மருத்துவ உலகம் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும், பலதரப்பட்ட  மக்களின் பண்பாடு, கலாசாரம்,  மத நம்பிக்கைகளின் அடிப்படையில், இன்றும் பல்வேறு தவறான புரிதல் காரணமாக நவீன மருத்துவத்திலும் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. கட்டுக்கதைகளையும் தவறான நம்பிக்கைகளையும் ஒரு நிலையான முயற்சியால் மட்டுமே மாற்ற இயலும். நமது நாட்டிலும் பல தரப்பட்ட மதங்களையும் கலாசாரங்களையும் இனங்களையும் அவர்கள் வைத்துள்ள பொதுவான மருத்துவம் சார்ந்தமூடநம்பிக்கைகளையும் மாற்றி அவர்களை நல்வழிப்படுத்துவது இன்றைய […]

1 min read

விண் பதியம், மண் பதியம் இடுதல்  எவ்வாறு செய்வது? 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்கவாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப் பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி பழகி தக்காளி பழம்  பறிக்க கற்றுக்கொண்டனர். மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் களப் பயணம் சென்றனர். மாணவர்களை அரசுத் தோட்டக் கலைப் பண்ணை அலுவலர் ராம் பிரசாத்   வரவேற்றார். மாணவர்களுக்கு முதலில் மல்லிகை, கத்தரி, மாமரம், புளியமரம், முந்திரி, பூவரசு, கொய்யா, அரளி போன்ற செடிகளைப் பற்றி  விரிவாக […]