10 வயதில் 12 உலக சாதனைகள் – சிறுவன் கிருஷ்வா கஜபதி!

 10 வயதில் 12 உலக சாதனைகள் – சிறுவன் கிருஷ்வா கஜபதி!

10 வயதில் 12 உலக சாதனைகள் / சிறுவன் கிருஷ்வா கஜபதி!

பள்ளி செல்லும் வயதில் 12 உலக சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 10 வயது சிறுவன் கிருஷ்வா கஜபதி. விளையாட்டில் எந்தவித பின்னணியும், அறிமுகமும் இல்லாத சிறுவன் கிருஷ்வா தனி ஒருவனாக விளையாட்டு துறையில் சாதிக்க ஆர்வமுடன் களம் இறங்கி உள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் மகனான கிருஷ்வா மந்தைவெளியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயதில் இருந்து கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங், குங்ஃபூ, செஸ், கியூப், பேட்மிட்டன் மற்றும் ரோலோபோலா மற்றும் பல கலைகளைக் கற்று அதில் பல சாதனைகளையும் செய்து வருகிறார் என்பது பெரும் வியப்பை தருகிறது.

கேலோ விளையாட்டு போட்டியில் பிரதமர் மோடி அவர்கள் முன்பு க்ரூப்பாக சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளான் இந்த இளம் சிறுவன்.

அதே விளையாட்டு போட்டியில் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளான். கேலோ விளையாட்டு போட்டியில் மெடல்களையும் பெற்றுள்ளான்.

வீடு நிறைய பதக்கங்களையும், சான்றிதழையும் நிரம்பி வைத்துள்ளான் இந்த பத்து வயது பாலகன் கிருஷ்வா கஜபதி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன். அவரது தாய் ப்ரியா ஹோம் மேக்கர். ஒரே அக்கா ராதாமணியும் விளையாட்டு மீது ஆர்வமுள்ளவர். சிறுவன் கிருஷ்வா சாக்லேட் உண்ணும் பருவமான மூன்று வயதிலிருந்தே விளையாட்டு துறை மீது அதீத ஆர்வம் கொண்டு முறையான பயிற்சி பெற்று தற்போது பல்வேறு உலக சாதனைகளை அசால்ட்டாக செய்து வருகிறான்.

இளம் வயது சாதனையாளர் கிருஷ்வா பெற்ற விருதுகள்:

கிருஷ்வா இந்த ஏழு ஆண்டுகளில் பனிரெண்டு விருதுகள் மற்றும் பல மெடல்களையும் வாங்கி சாதனை படைத்து வருகிறார் மிக இளம் வயதிலேயே…

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் நிஞ்ஜாக் தொடர்ந்து ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் சிலம்பம் தொடர்ந்து ஒரு மணி நேரம் 10 நிமிடம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கால்பந்தில் தொடர்ந்து பத்து நிமிடம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் கால்பந்தில் 15 நிமிடம் தொடர்ந்து நின்று நிஞ்ஜாக் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இன்ஜினியஸ் சாம் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் தொடர்ந்து
நூற்றிபதினோரு ஓடுகள் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இன்ஜினியர்ஸ் சாம் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் கண்ணை கட்டிக் கொண்டு 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் தொடர்ந்து நிஞ்ஜாக் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் தொடர்ந்து 555 ஓடுகளை 16.54 நிமிடத்தில் உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் கால்பந்தில் நின்று தொடர்ந்து 25 ஓடுகளை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இன்டர்நேஷனல் அச்சீவர்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் கால் பந்தின் மேல் பலகை வைத்து அதன் மேல் நின்று தொடர்ந்து 21 நிமிடம் நுண்ஜாக் தொடர்ந்து செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் கால் பந்தின் மேல் பலகை வைத்து அதன் மேல் நின்று 25 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

இன்ஜினியர்ஸ் சாம் வேர்ல்ட் ரெக்கார்டு ரோலோ போலோவில் நின்று 10 நிமிடம் 58 வினாடி இன்று சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் குரூப் போட்டிகளில் சிலம்பம் சுற்றி சான்றிதழ்களையும் மெடலையும் பெற்றுள்ளார்.

ஆட்டோ ஒட்டுனரான கிருஷ்ணாவின் தந்தை கஜபதி மிகுந்த சிரமத்திற்கிடையே கிருஷ்ணாவை இத்துறையில் சாதிக்க பயிற்றுவித்து வருகிறார். இவரது தாயார் ப்ரியா கிருஷ்வாவை இத்தனை சிரமத்திலும் படிப்பிலும் விளையாட்டிலும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். கிருஷ்வா விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரன் தான். கிருஷ்வா தமிழின் 247 எழுத்துக்களை தலைகீழாய் சொல்லியும் சாதனை படைத்து வருகிறான்.

IAS படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே கிருஷ்வாவின் ஆசை. அதே போன்று தனக்கு தெரிந்த விளையாட்டை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாய் சொல்லித்தர வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த சிறிய வயதில் பெருங் கனவுகளை சுமந்தபடி மிகுந்த சிரமத்திற்கிடையே விளையாடி சாதனைகள் பல படைக்க வேண்டும் என்பதே கிருஷ்வாவின் லட்சியம்.

இளம் சாதனையாளன் கிருஷ்வா இத்துறைகளில் மேலும் பல உலக சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்…!!!

  • தனுஜா ஜெயராமன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...