03-06-2025
இன்று உலக சைக்கிள் தினம்
இதை முன்னிட்டு ஒரு நினைவலை.
நான் பீ ப்பிள் டுடே பத்திரிகை யில்
சின் ஞ்சி று வயதினிலே னு ஒரு தொடர் எழுதி னே ன். அது என்னோட அந்த கால சிறு வயது சம்பவங்க ள். பற்றிய து. ஒவ்வொரு பகுதி யும் ஒவ்வொரு பொருள் பற்றி இருக்கு ம். இது என்னோட சைக்கிள் பற்றிய து. ஏப்ரல் 2020 இத ழில் வந்தது
அதை நண்பர்கள் படிக்க இங்கு தருகிறேன்.
“நானும் சைக்கிளும்”
“அப்பா இந்த சைக்கிள் நல்லா இருக்கா “?பையன் கேட்டான்
“நல்லா இருக்குடா.என்ன விலை”ன்னு கேட்டேன்
“இருதாயிரம் ரூபா% னு சொன்னோன்‘
மயக்கம் போட்டு விழா குறையாக “அப்படி என்னடா அந்த சைக்கிள்ள விசேஷம்னு” கேட்டேன்
“அது கியர் சைக்கிள்”
“அப்படின்னா “
“உனக்கு புரியாதுனு” கிளம்பிட்டான்
சைக்கிளை பாத்தா ஒரு உட்கார சீட்டு‘ கேரியர் கிடையாது. முன் சக்கரத்தின் மேலே ஒரு தகரம் போல 3 அடிக்கு நீட்டிக்கொண்டு இருந்தது.
அப்புறம் என்ன? பின்னாடி கேரியர் லா ம் இல்லை
இதை பார்த்தவுடன் எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டதுm
நான் முதன்முதலா இப்படிப்பட்ட சைக்கிளதான் சைக்கிள் கற்றுக்கொண்டேன்.
இரண்டு டயர்கள். சீட்டு. பெல். பிரேக் இதை தவிர வேறு ஏதும் இருக்காது .சின்ன பசங்க கற்றுக்கொள்ள அயருக்கு தருவாங்க.
அதுக்கும் இதுக்கும் வித்யாசம் எனக்கு தெரியல.
“இன்னிக்கு என்ன கதை” இது பரமு
“நான் எழுதும் போது நீ வராமல் இருந்தாதான் ஆச்சரியம்”
“
ஒ.சைக்கிளா’
“ஆமாம் “என சொல்ல “எனக்கு இங்கு வேலையில்லை ” என்றான்.
“ஏன்னா நான் தான் சைக்கிள் கற்றுக்கலனு உனக்கு தெரியுமே” என்றான்.
“பரவால இரு?எனக்கு இங்கே செம போர் இந்த குரானனல வீட்ல இருந்துதான் வேலை”
“நீ பரவால .நான் பிசினஸ் பண்றவன் எல்லாம் போச்சு” என்றான்
சைக்கிள் ஓட்ட எனக்கு என் சின்ன வயசு பிரண்டு ஜெயச்சந்திரன் அவன்தான் சொல்லிக்கொடுத்தான்.
அவன் சைக்கிள் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான் அவனுக்கு படிப்பு வரல ன்னு சொல்லிட்டு சைக்கிள் கடையில் வேலைக்கு போயிட்டான்.
அனனோடு நான் ரொம்ப அட்டாச்மென்ட்.
நான் முதல்ல சொன்னே சைக்கிள் .அது அவன் கடையில்தான் இருந்தது .
“டேய் நீ சைக்கிள் கத்துக்கோ” என கேட்க நான் “சரி சொல்ல “
அவனுடைய கடையிலிருந்து சைக்கிளை கொண்டாந்து சீட்டில் உட்கார வெச்சு தள்ளி விட்டு பின்னாலே ஒடி வந்து சைக்கிள் ஒட்ட டிப்ஸ் கொடுத்தான்.
முதலில் ஒரு நாள் ரொம்ப கஷ்டமாதான் இருந்தது.
பெல் அடிக்க தெரியல. பிரேக் பிடிக்க தெரியல. பின்னால கேரியரும் கிடையாது.
பல தடவை கீழே விழுந்து அடி.
நாய்மேல் ஏற்ற அது கத்திக்கொண்டே ஒடும். குப்பை தொட்டிகள் மீது இடித்தல்
இப்படி சைக்கிள் கற்க ஆரம்பித்தேன்.
இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது.
அப்பலாம் தெருல மக்கள் கூட்டம் இப்ப போல கிடையாது
நானா ஒட்டலாம் னு பாத்தா காசு கி டையாது.
தாத்தா என் வீட்டுக்கு வந்த போது காலணா .அரையணா கொடுப்பாரு .அதை சேர்த்து அரைமணி அவருக்கு சைக்கிள் அயருக்கு வாங்கி கத்துக்கொணடேன். ஆனாலும் சைக்கிள் சீட்ல நானா ஏறி உக்கார தெரியல.
எங்கேயாவது கல்லு . பிளாட்பார்ம் சென்று சைக்கிளை முட்டுக்கொடுத்து ஏறி உட்கார்ந்து ஒட்டுவேன் .
அப்பா கிட்டே சைக்கிள் இருந்தது
பெரியது ஹெர்கு லிஸ்னு சொல்வாங்க, நான் அதுல பாதி உயரம்தான் .அதை என்னால் தள்ள கூட முடியல .அப்பா அப்போ பி அண்ட் சி மிலில் ஒரு தொழிலாளி . அவருக்கு 3 சிப்ட் மாசத்ல மாறி மாறி வரும்.
அவரு கம்பெனி காக்கி யுனிபார்ம் போட்டுக்கொண்டு சைக்கிள் ஒட்டும் அழகே தனி.
வேலைக்கு போய்ட் வந்து தெருவில விட்டு விட்டு போயிடுவார்.
அவர் வீட்டுக்கு வரும் போது பெல் அடிக்க நாங்க போய் கதவை தொறப்போம்m அவரின் வித்யாசமாக பெல் அடிப்பார்mஅந்த சத்தம் எங்களுக்குதானன் தெரியும் அப்பா வந்துட்டாரு.
அந்த சைக்கிளை எடுத்து என்னால் ஒட்ட முடியல.
ஜெயசந்திரன் அப்பா சைக்கிளை செம அனசயமாக ஒட்டுவான் .அப்பா துங்கற நேரத்தல எடுக்க சொல்வான் .
அவனுக்கும் சைக்கிள் எட்டாது அரை பெடல் போட்டு தட்டிக் கொண்டு காலை துக்கி சட்டுனு ஏறிடுவான் ,அப்படியும் கால் எட்டாது ஆளாலும் பெடலை மிதிக்க அது மேல வரும் போது அந்த ஒரு பெடலைணே தட்டி ஒட்டுவான்.
டபுள்ஸ் வானு கூப்பிடுவான் எனக்கு பயம் ,உட்கார மாட்டேன்.
அப்பா எழுந்து வரும் நேரம் பார்த்து சைக்கிளை வச்சட்டு கதை பேசிக்கொண்டு இருப்போம் .
“ஆகா. ரொம்ப சுவாரஸ்யமாக இருக்குடா” ,இது பரமு
“ஆமாம்டா “என சொல்லிக்கொண்டே₹ இன்னொரு கதை இருக்கு அதை கேட்டா நீயும் அதிர்ச்சியாகிவிடுவ” என்றேன்,
எனக்கு சைக்கிள் மீதே வெறுப்பு வர காரணமாக இருந்த சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தேன்
“நீங்களும் கேளுங்க “
வருடா வருடம் பொங்கலுக்கு எங்க ஊருக்கு போவேன் .
அப்பா என்னை விட்டுவிட்டு சென்னைக்கு போய்விடுவார். சென்னையில எங்க வீடு இருப்பதால் அங்கே அம்மா தங்கச்சியுடன் பொங்கல்.
எங்க ஊரு பெயர் ஆலப்பாக்கம் ஒருசின்ன கிராமம். இப்ப இருக்கிற போருருக்கு போற வழி .இப்ப இந்த ஊர் எப்படினு கேட்காதீங்க இப்ப ஆலப்பாக்கம் சென்னை சிட்டில ஒரு நகரமாக போச்சு அவ்வளவு மாற்றம்.
இங்கே ஒரு கிராமம் இருந்ததற்கான அடையாளமே இல்ல.
ஊருக்கு போனவுடன் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி அத்தைகள் விசாரிப்பு ,உபசரிப்பு அவங்கள பாத்துட்டு நேரா சின்னதாத்தா வீட்டுக்கு போயடுவேன் .அந்த தாத்தா வீடும் பக்கத்திலதோன்
அங்கே தான் தம்பி குணசேகர் இருக்கான்.இவன் என் சித்தப்பாவோட பையன் என்னைவிட 2 வயது சின்னவன்.
.என் சின்ன தாத்தாவுக்கு குழந்தையில்லாததால்
என் சித்தப்பா அவர் பையனை அதான் சேகரை சின்ன தாத்தாவுக்கு (அவருக்கு சித்தப்பா) தத்து கொடுத்திட்டாரு.
அவங்க வீட்ல யாரு வந்தாலும் சாப்பாடு பலமாக இருக்கும்.
மோர் .இளநீர் .மதியானம் சாப்பாட்ல கறி .கோழி , மீன் குழம்பு முட்டைனு எக்கச்சக்கமாக இருக்கும்.
சின்னதாத்தா பேரு நாரயணசாமி .குள்ளமாக தான் இருப்பாரு.
எப்பவும் வெள் ளை சட்டை வெள்ளை வேட்டி .குரல் கணீருனு இருக்கும்.
வேலைக்காரங்க அவர் முன்னால வர மாட்டாங்க.
ஊர்ல அவர் சொன்னா சொன்னது தான் . நல்ல மனுஷர்.
சித்தி பேரை சொல்லி” சம்பந்தம் பையன் உமா வந்திருக்கான் நல்லா கவனி அவனை” என சொல்லிட்டு “சேகரா “னு ஒரு குரல் கொடுக்க அவன் ஒடி வர அப்புறம் நாங்க ரெண்டு பேரும் நல்லா விளையாடுவோம்?
சில சமயங்களில் சண்டை கூட உண்டு.
“உன் அப்பன் வரலியா அவன் எங்கே “னு சின்னன ஆயா என்னை கேட்க” என்னை விட்டட்டு போய்டடாரு “னு சொன்னேன்
சம்பபாடு முடிச்சவுடன் சேகர் “அண்ணா சைக்களில வா கழனிக்கு போலாம் வா “னு கூப்பிட நான்” சரி” சொன்னேன்
அவன் நல்லா சைக்கிள் ஒட்டுவான். அவனுடைய வயதுக்கு ஏற்றார்போல அந்த சைக்களிள்ன இருந்ததது.
முதல் அவன் ஒட்டினான் அப்பறம்” நீ ஒட்டுனா” என்றான்
எனக்கு ஏற தெரியாதில்ல அங்கே ரோட்டு ஒரமாக இருந்த மைல் கல் அருகே சைக்கிளை நிறுத்தி ஏறினேன்.
அப்ப அந்த கிராமத்ல மொத்தமே நாலு தெருக்கள் தான் , பஸ்லாம் வராது செம்மண் சாலை
16 வயதினிலே படம் பார்த்த போது எனக்கு எங்க ஊருதான் ஞாபகம் வரும்.
வண்டில கொஞ்சம் தொலைவுதான் போனே ன்.
அப்போ தீடிர்னு ஒரு பையன் சைக்கிள் குறுக்கால வந்து விழுந்தான்.
ஒரு பழைய சைக்கிள் வீலை ஒரு குச்சி கொண்டு தட்டி ஒட்டி வந்தான். அப்பவெல்லாம் கிராமங்கல இப்படி கார் டயர் ,. சைக்கிள் டயர் ,வீல்களை பசங்க குச்சி கொண்டு தட்டிbஅதை ஓட விட்டு அது பின்னால் வருவாங்க ரேஸ் வேற நடக்கும்
என் போதாதா காலம் ,அந்த சின்ன பையன் என் சைக்கிள் மீது இடித்து விழுந்து அவன் சைக்கிள் வீலில் உள்ள கம்பி அவன் நெற்றியில் குத்தி
குத்தி குபு குபு ரத்தம் பீ றி ட்டு அடிக்க நான் சேகர் பயந்து போய் வண்டி ய அப்படியே போட்டுடு வந்தோம்.
“ஐயோ” என்றான் பரமு
“அப்புறம் என்ன ஆச்சுட “
“அப்புறம் ,,என்ன நடந்ததது னு என் அத்தை அலமேலு அவங்க சொன்னாங்க. அவங்க அப்போ எட்டாவது படிச்சுக்னினு இருந்தாங்க “
என் அப்பாவோட 3வது தங்கச்சி. எங்க குடும்பத்தில என் அப்பாதான் முதல்ல 11வது படிப்பு எஸ் எஸ் எல் சி பாஸ் பண்ணவர்
அப்பறம் என் அத்தைதான்.
என்ன நடந்தததுனு அவங்க சொன்னாங்க
என்மேல பிரியம். எனக்கு 3 நாட்களாக நாளா ஜீரமாம் கண்ணே விழிக்கலயாம் எல்லாரும் பயந்து போய்டடாங்ளாம் .அவங்கதான் கூட இருந்து என்ன கவனிச்சாங்களாம்
அந்த வருஷம் பொங்கல் கூட சரியா கொண்டாலயாம்.
அவங்க சொன்ங்க. அந்த பையனை சின்ன தாத்தாதான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் வைத்தியம் பார்த்து நெற்றியில் தையல் போட்டு அப்புறம் அவன் வைத்ய செலவுக்கு பணமும் கொடுத்தாராம்.
கொஞ்ச ம் மனசு திருப்தி ஆச்சு.
அது சின்ன கிராமம். அதான் விஷயம் ஊருக்கு தெரிஞ்சி போச்சு.
இவன் பெரியவர் சம்பந்தம் பையன் இவன்தான் சைக்கில இடிச்சான்னு குசு குசுனு பேசிக்கொண்டே என்ன பாப்பாங்க,
பாவம் இவனும் சின்ன பையன் தெரியாம இடிச்சிட்டான் என சொல்வாங்க
எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி தோன்றும். சைக்கிள் மீதே வெறுப்பு வந்ததது
இந்த நிகழ்வுக்கு பிறகு எனக்கு கிராமத் திற்கு போக ஆவல் போயிடுத்து.
மெட்ராஸ் வந்த பிறகு சைக்கிள் ஓட்டும் ஆசையே போய்டுச்சு எனக்கு
ஜெயச்சந்திரன் கேட்டான் .சொன்னேன்.. “இதுக்கு போயா னு% சொன்னான் .
ஸ்கூல் படிப்பு முடிஞ்சு பி யூ சி படிப்பு வைஷ்ணவா காலேஜ். அரும்பாக்கம். எங்க வீட்லே இருந்து பஸ் வசதி இல்ல ,அப்பா ஒரு செகண்ட் ஹாண்ட் க்கு சைக்கிள் வாங்கி தந்தார். அப்போ அது விலை 120 ரூபாய். ராபின் ஹூட் பேர். பச்சை கலர்.
இது ரொம்ப எனக்கு பிரண்டஆகிட்டது ,
பிறகு அதே காலேஜ் லா மூணு வருஷம் பி ஏபடித்தேன். இந்த 4 வருஷம் எனக்கு காலேஜ் பிரண்ட் திருவெங்கட நாதன். ரெண்டு பேரும் ஒன்னா போவோம். வருவோம்.
தினமும் வாடிக்கையாக சில பதாசாரிகளை சந்திப்போம்
அந்த காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டி நாங்க பாக்கல‘காரணம் அவங்களுக்கு னு தனி சைக்கி ள் கள் இப்போ போல அப்போ இல்ல
பெண்கள் அப்போ பாவடை தாவணியில்தான். அவர்களுக்கு ஆண்கள் ஓட்டும் சைக்கிள் வசதி படாது.
வாடிக் கை மறந்தது ஏனோ .பாடல் கேட்கும் போதெல்லாம்
அதில ஜெமினியும் சாரோ ஜாதேவியும் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பாடும் பாடல் காட்சி மனதை இழுக்கும்m
அதேபோல பண்ககார குடும் படத்தில் எம்ஜி ஆர் சைக்கிள் ஒட்டிக்கொண்டே பாடும் ஒன்று எங்கள் ஜாதி பாடலும் அருமையாக இருக்கும்டா.
சைக்கிள் மெயின்டைன் பண்றது ஒரு கலை.
வாரம் வாரம் துடைக்கனும். வருஷம் ஒரு சர்வீஸ் பண்ணணும்.
வண்டி ஓட்டும் போது பல சிக்கல்கள் வரும். டியூப் ல காற்று போய்டும். பஞ்சர் ஆகிடும். வண்டி தள்ளிட்டு போய் சைக்கிள் கடையில் கொடுத்து சரி பண்ணனும். பிரேக் பிடிக்காது. பெல் அடிக்காது. இப்படி ,
ராத்திரினா லைட்டு இல்லாமல் போககூடாது.
போனா போலிஸ்காரர் பிடிப்பாருm
“ஒரு நாடகத்தில் காத்தடி ராம மூர்த்திபேசற வசனம் சொல்லவா” என்றேன்
“என்ன ஜோக்கா டா”
“சைக்கிளே லைட் இல்லனு கேஸ் போடறீங்க,அவனவன் சைக்கிளே இல்லாம போறான் அவனை பிடிக்க மாட்டீங்க” என்பார் என்றேன்
“செம ஜோ க்” க னு பரமு சிரித்தான்.
ஆயுதபூஜைக்கு அப்பா அவரு சைக்கிளு என் சைக்கிளு ரெண்டையும் நல்லா துடைத்து சந்தனம் குங்குமம் பூ வைத்து பூஜை பண்ணுவார்.
எலுமிச்சைபழத்தை டயர் அடியில வைச்சு ஓட்ட சொல்வார்.
அது எதுக்குனு புரியலய? ஆனாலும் அதை நான் தொடர்ந்து செய்து வந்தேன்
“கேட்க ரொம்பஇன்டெரெஸ்ட்டிங்.₹ இது பரமு
காலேஜ் முடிச்சிட்டு வீட்லே சும்மா இருந்த போது மெட்ராஸ் புல்லா ல்லா ரவுண்டு. டெய்லி சினிமா. எங்க
ஏரியா தியேட்டர் களுக்கு உமா,மேகலா. சயானி ராக்சி . மவுண்ட் ரோடுல கெயிட்டி ,காசினோ, ஸ்டார் ,மிட்லண்டு இப்படி எல்லாத்துக்கும்
சைக்கிள் தான் பயணம்.
கவர்மென்ட் வேலை கிடைத்தது ,மாம்பலத்தில் ஒரு வருஷம் பயிற்சி ட்ரைனிங் institue. இடம் இப்போது பிரகாசம் சாலை. ஒரு வருஷம் சைக்கிள் .
அப்புறம் மாம்பலத்தில் பர்க்கிட் ரோடு ஆபிஸ்ல வேலை.
வீடல் இருந்து சேத்து பட்டு வரை சைக்கிள் அப்புறம் ரயிலில்
அப்போ நண்பர் ஆனந்த கிருஷ்ணன் பழக்கம். அவர் வீடும் அயனாவரம் தான் தினமும் நாங்க சைக்கிளில் தான்.
சேத்பட் வரை. பிறகு மாம்பல ம் போக எலக்ட்ரிகல் ட்ரெயின்
ப ல கதைகள் பேசிக்கொண்டே போவோம்.
தொடர்ந்து கல்யாணத்துகு பிறகு அப்புறம் கொளத்தூர்ல வீடு கட்டியபோது அதற்கும் ராபின் தான் துணை.
புது வீட்ல சில வருஷங்கள் ராபின் இருந்தான்.
25 வருஷம் நட்பு.
அங்கே அப்போ கட்டிட வேலை செய்யும் ஒரு ஆண் சித்தாள். ரொம்ப ஏழை நான் . தினம் 5 கிலோ மீட்டர் நடந்து வரேன்.இந்த சைக்கிள் சும்மா தானே இருக்கு நான் வாங்கறேன். என்ன விலைக்ககு தருவீங்க சார் என கேட்டான்
நான் ஸ்கூட்டர் வாங்கிட்டதால ராபினை யூஸ் பண்ணாமல் ஒரு மூலையில் கி டந்தான்.
அந்த சித்தாள் கேட்க. ராபினை பிரிய மனமில்லை இருந்தாலும்
அவன் வேறு யாருக்காவது உபயோகமாக இருப்பான் என அந்த சித்தாளுக்கு சும்மாவே தந்தேன்
காலில் விழாத குறையாக அவன் தன் மகிழ்ச்சியை முகத்தில் தெரிவித்து ராபினை எடுத்து சென்றான்.
“ரொம்ப வருத்தம் இல்லயா” இது பரமு
“ம் .”என்றேன்
அப்புறம் மகள்கள் பையனுக்கு சைக்கிள்கள் வாங்கி கொடுக்க அவங்க நன்றாக உபயோக படுத்தினாங்க.
இப்போஅவங்க வளர்ந்துவிட்டதால் டூ வீலர்ஸ்ல போறதாலே அந்த அவங்க சைக்கிள்கள் எல்லாம் இன்னும் இருக்கு
“என்னவோ தெரியல எனக்கு அவைகளை விற்கனும்னு தோணல”
ஒரு வேளை அதுகள் என் ராபின் நினைவு களை சொல்ல இங்கேயே தங்கிவிட்டனவோ
*உமா காந்த் *