ஜூன் 3., 2016
முகமது அலி நினைவு நாளின்று 😢
”நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட வேண்டும்”. – என்றவரிவர்
குத்துச்சண்டை களத்தில் மட்டுமின்றி அமெரிக்காவில் அக்காலத்தில் தீவிரமாக பரவியிருந்த இனவெறிக்கு அவர் குவிக்கும் வெற்றிகள் கறுப்பின மக்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தின. 37 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றதால் ‘நாக் அவுட் நாயகன்’ என்று அழைக்கப்பட்டார்.
1960 ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி முடிந்து நாடு திரும்பிய அலி, ஒரு ஹோட்டலுக்கு காபி சாப்பிட சென்றார். “ நாங்கள் கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை” என அங்கு பணியில் இருந்த பெண் சொன்னார்.
கடும் கோபமடைந்தார் முகமது அலி. விறுவிறுவென அங்கிருந்து வெளியேறிய முகம்மது அலி, தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியெறிந்தார். இந்த சம்பவத்தை பின்னாளில் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட அவர், “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை அணிய விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்.
The greatest என்ற திரைப்படம், இவரது கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.
