பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி

பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி உரத்த சிந்தனை தஞ்சாவூர் கிளையின் சார்பில் தஞ்சை பெசன்ட் அரங்கில் உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் ஆடிட்டர் என் ஆர் கே தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை உரத்த சிந்தனை துணைத் தலைவர் கவிஞர் அய்யனார் வரவேற்புரை வழங்கினார். திருமதி சாமி மல்லிகா , இந்து மதி ஆகியோர் பாரதி பாடல்களைப் பாடினர் .

தஞ்சைக் கிளையின் கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கமும், பாரதி என் சாரதி என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது.

கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற பேச்சரங்க நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பங்குபெற்ற இரண்டு மாணவகருக்கு தலா ரூபாய் 1000/- பரிசுத் தொகையினை ஆடிட்டர் என் ஆர் கே அவர்களும் மூன்று பேருக்கு தலா ரூ 1000 |- பரிசுத் தொகையினை திரு மணிமாறன் அவர்களும் வழங்கினர்.

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு டி கே ஜி நீலமேகம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சின்னத்திரை தொடர்களின் நாயகர் எழுத்தாளர் தேவிபாலா  மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியினை க. தனபாலன் தொகுத்து வழங்க, மணிமாறன் நன்றியுரை வழங்கினார்.

தஞ்சைக் கிளையின் தலைவர் எழுத்தாளர் எஸ் ராஜவேலு. செயலாளர் தஞ்சை தாமு, உரத்த சிந்தனை சங்கத்தின் பொதுச்செயலாளர் உதயம் ராம். உட்பட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

படங்கள் :ராம் – ராஜாராம்

செய்தித் தொகுப்பு : உதயம் ராம்

காணொலித் தொகுப்பு : முனோன்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!