1967-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆளும் கட்சி வரிசையில் காங்கிரஸ்

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று மற்ற சில கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதனையடுத்து சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா, தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப்பிரமா ணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் 11-ந் தேதி (அதாவது நேற்று) சட்டசபை யில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று, உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு அவை கூடியது. இதில் முதல்-அமைச்சர் விஜய் உள்பட சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட் சிப் பீடத்தில் அமர்ந்து அரசாண்டு வந்தன. ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் அந்தக்கட்சிகள் மாறி மாறி அமர்ந்திருந்தன. ஆனால் அனைத்தும் மாறி நேற்று முழுவதும் வித்தியாசமான காட்சி தென்பட்டது.

அதாவது முதல்முறை தேர்தலை சந்தித்த த.வெ.க., ஆளும் கட்சி வரிசையிலும், ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்திருந்தனர். சட்டசபையில் மற்றொரு காட்சியும் ஆச்சரியப்படுத்தியது.

தி.மு.க.வின் கூட்டணியில் இடம்பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். 1967-ம் ஆண்டுக்குப் பிறகு நேற்று காங்கிரஸ் அந்த வரிசைக்கு சென்றது. ஆனால் நேற்று எந்த எம்.எல்.ஏ.க்கும் இருக்கை எண் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!