பிரதோஷ தினத்தில் நற்கதியளிக்கும் நந்தி வழிபாடு.. 🙏

*இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய்

🙏நந்தி_வழிபாடு 🌹🙏

🙏 இன்று பிரதோஷம்.. சிவபெருமானை வழிபட மிக உகந்த நாள். அத்துடன் நந்தி பகவானையும் வழிபட மிக சிறந்த நாளாகும்.🙏

பிரதோஷ காலத்தின் போது சிவபெருமானுடன், நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பர்.

🙏நந்தி_பகவான் சிவபெருமானின் வாகனம் ஆவார். கைலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார்.

இவர்_அனுமதி பெறாமல் ஈசனின் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. எனவே தான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது நம்மை தடுத்தால், என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான் என்று சொல்லும் வழக்கமும் ஏற்பட்டது.

🙏நந்தி_தேவர் வழிபாடு:🌹🙏

🙏 அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி பாம்பு வெளியிட்ட விஷத்தை உண்ட சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத் தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

🙏 நந்தி_தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

🙏பிரதோஷ பூஜையில் நந்திக்குத் தான் முதல் அபிஷேகம் நடைபெறும். இத்தினத்தில் நந்தி பகவானின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும்.

🙏 கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது.

  • பிரதோஷ பூஜையில் நந்தி பகவானை வழிபட்டால் சகல தெய்வங்களையும் வழிபட்டதற்கு ஒப்பாகும்.*

நந்தி பகவானை பிரதோஷ நாளில் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:

  • நந்தி பகவானை 3 முறை பிரதட்சணம் செய்தால் எண்ணிய காரியம் நிறைவேறும்.* நந்தி பகவானை 5 முறை பிரதட்சணம் செய்தால் ஜெயம் உண்டாகும். 🙏நந்தி பகவானை 7 முறை பிரதட்சணம் செய்தால் துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் உண்டாகும். நந்தி பகவானை 9 முறை பிரதட்சணம் செய்தால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும். நந்தி பகவானை 11 முறை பிரதட்சணம் செய்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
  • நந்தி பகவானை 13 முறை பிரதட்சணம் செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.* 🙏நந்தி பகவானை 15 முறை பிரதட்சணம் செய்தால் செல்வம் பெருகும். 🙏நந்தி பகவானை 17 முறை பிரதட்சணம் செய்தால் தன விருத்தி உண்டாகும். 🙏நந்தி பகவானை 108 முறை பிரதட்சணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

ஓம் நமசிவாய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!