பல் மருத்துவத்தில் தவறான நம்பிக்கையும் சரியான காரணங்களும்
இன்றைய மருத்துவ உலகம் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும், பலதரப்பட்ட மக்களின் பண்பாடு, கலாசாரம், மத நம்பிக்கைகளின் அடிப்படையில், இன்றும் பல்வேறு தவறான புரிதல் காரணமாக நவீன மருத்துவத்திலும் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. கட்டுக்கதைகளையும் தவறான நம்பிக்கைகளையும் ஒரு நிலையான முயற்சியால் மட்டுமே மாற்ற இயலும்.
நமது நாட்டிலும் பல தரப்பட்ட மதங்களையும் கலாசாரங்களையும் இனங்களையும் அவர்கள் வைத்துள்ள பொதுவான மருத்துவம் சார்ந்த
மூடநம்பிக்கைகளையும் மாற்றி அவர்களை நல்வழிப்படுத்துவது இன்றைய மருத்துவர்களின் தலையாய கடமைகளில் ஒன்று.
அதன் முதல் முயற்சியாகப் பல் மருத்துவத்தில் பொது மக்கள் கொண்டுள்ள பொதுவான தவறான மூடநம்பிக்கைகளையும் அதற்குச் சரியான அறிவியல் மாற்றுமுறைகளையும், சரியான காரணங்களையும் இப்போது காணலாம்.
தவறான நம்பிக்கைகள் | சரியான காரணங்கள் |
கடினமான ப்ரஷ் கொண்டு பல் துலக்கினால் பற்கள் மிகவும் வெண்மையாக மாறும் | சரியான மிருதுவான பிரஷ்களை கொண்டு பற்களை துலக்குவது தான் நல்லது இல்லையெனில் பற்கள் தேய்மானம் அடையக் கூடும் |
நீண்ட நேரம் பற்களை துலக்கினால் மக்கள் மிகவும் வெண்மையாக மாறும் | சரியான பல் துலக்கும் முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம் இல்லை என்றாலும் பற்கள் தேய்மானம் அடையக்கூடும் |
சாம்பல், உப்பு போன்றவற்றை கொண்டு பல் துலக்கினால் பற்கள் மிகவும் சுத்தமாகவும் வெண்மையாகவும் மாறும் | இதுபோன்ற உமி சாம்பல் உப்பு போன்றவற்றை நேரடியாக பல்துலக்க பயன்படுத்துவதன் மூலம் பற்களும்,பற்களை சுற்றி உள்ள மிருதுவான ஈறுகளும், தசைகளும் பாதிப்படையக்கூடும் |
விரல்களை கொண்டு பற்களை துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும் | பற்களை விரல்களால் மட்டுமே துலக்கினால் எல்லா இடங்களும் சுத்தமாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு |
வேப்பம் குச்சிகளை கொண்டு பற்களைத் துலக்கும் போது அவை நல்ல மாற்றங்களை கொடுக்கும் | வேப்பங்குச்சிகளுக்கு மருத்துவத் தன்மை உள்ளது என்ற போதிலும் அவை கடினமாக இருப்பதால் பற்கள் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் |
ஒழுங்காக பல் துலக்காமல் இருப்பதே வாய் துர்நாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் | பல் வேறு உடல்நல கோளாறுகளும் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் வகிக்கின்றன,பற்களை சுத்தமாக வைத்திருக்காதது மட்டுமே காரணம் அல்ல |
ஒரு நாளைக்கு ஒரு முறை பல் துலக்குவது மட்டுமே போதும் | இரண்டு முறை பல் துலக்குவது அவசியம் குறிப்பாக இரவு நேரத்தில் உறக்கத்திற்கு முன்பாக பல் துலக்குவது என்பது மிக மிக அவசியமான ஒன்று |
ஃப்ளோசிங்(flossimg) செய்வது பற்களுக்கு உள்ளே இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்துகிறது | சரியாக ஃப்ளோசிங்(flossimg) செய்வதன் மூலம் பற்களுக்கு இடையே உள்ளே இடைவெளிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. |
ஒரு ப்ரஷ் ஐ குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம் | இதுபோன்று ஒரே பிரஷ்களை எல்லோரும் பயன்படுத்துவதன் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இதனால் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் அப்படி செய்தல் மிகவும் தவறு |
அடுத்த பகுதியில் பல் சிகிச்சைகளில் மக்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகளையும் அதற்குச் சரியான மருத்துவ வழிகாட்டு முறைகளையும் காணலாம்.
டாக்டர் கோபாலகிருஷ்ணன், சென்னை