பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு 

 பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  பி.எஸ்.எல்.வி.
சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டு செயற்கைக்கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிகரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.
அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

டெலியோஸ்-2 உடன் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.  இஸ்ரோ ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சமீபத்தில் நிலைநிறுத்தியது என்கிற தகவலை பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  எடுத்துக் கூறினார். இந்தச் சாதனையைச் செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...