செனாய் நகர் திரு.வி.க.பூங்கா திறந்தவெளி திரையரங்கம் திறப்பு

 செனாய் நகர் திரு.வி.க.பூங்கா திறந்தவெளி திரையரங்கம் திறப்பு

சென்னை, செனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மெட்ரோ பயணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 30 நபர்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது, “திரு.வி.க.பூங்காவின் திறந்தவெளி திரையரங்கத்தில் இந்நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் சிறிய நிகழ்ச்சிகள் இனிவரும் காலங்களில் நடைபெறும் என்றும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை கண்டு களிக்க வரும் பொதுமக்கள் தங்களது திறமைகளை இம்மேடையில் வெளிப்படுத்தலாம்” என்றும் இயக்குநர் ராஜேஷ்  சதுர்வேதி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “பொதுவாக சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஒவ்வொரு மாதமும் பயணிகளைப் பல்வேறு பிரிவுகளிலும் தேர்வு செய்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்நிகழ்வு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 360 நபர்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மார்க் மெட்ரோ உறுதுணையாக இருந்தது. இரண்டாம் ஆண்டில் இது போன்ற நிகழ்ச்சிகளை மார்க் மெட்ரோவுடன் இணைந்து நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மார்ட் மெட்ரோ உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அடுத்த நிகழ்ச்சி இந்த அரங்கத்திலேயே நடத்த்த திட்டமிடப்படும். அவ்வாறு நடைபெறும்போது பார்வையாளர்களாக வருகை தரும் பொது மக்கள் தங்களுக்குள் உள்ள திறமைகளை இந்த மேடையில் வெளிப்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் திறமை உண்டு. அந்தத் திறமை சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கக்கூடும். அதை வெளிப்படுத்தும் மேடையாக நீங்கள் திரு.வி.க.பூங்காவின் திறந்தவெளி திரையரங்கின் மேடையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார். இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த மார்க் மெட்ரோ இயக்குநர் வி.கே.இளங்குமணன் மேடையில் திறமையை வெளிபடுத்த வரும் நபருக்குப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து சிறுவன் ஒருவன் தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார். அச்சிறுவனுக்கு மார்க் மெட்ரோ சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 17 சிறுவர், சிறுமியர்கள் அம்மேடையில் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினார்கள். அந்த 17 நபர்களுக்கும் மார்க் மெட்ரோ சார்பாக மெட்ரோ இரயில் பயண அட்டை பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் வி.விஜயவரதன் (இயக்கம்), மேலாளர்கள் பி. லட்சுமி (வருவாய்), கே.எஸ்.அருண் (இயக்கம்) மற்றும் அல்தாப் உசேன் (இயக்கம்), துணை மேலாளர் ஏ.அருள்ராதா (இயக்கம்), மார்க் மெட்ரோ நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...