சென்னையில் இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்

சென்னை: கணினி சேவை மேம்​பாட்​டுப் பணி​கள் காரண​மாக சென்​னை​யில் இன்​றும், நாளை​யும் (மார்ச் 7, 8) மின் கட்​ட​ணம் செலுத்​துதல், மின் இணைப்பு விண்​ணப்​பம் உள்​ளிட்ட ஆன்​லைன் சேவைகள் நிறுத்​தப்​படு​வ​தாக மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழ்​நாடு மின்​பகிர்​மான கழகம், மின்​நுகர்​வோர்​களுக்கு மேம்​பட்ட சேவைகளை வழங்​கும் நோக்​கில், கணினி சேவை​களை புதிய சர்​வர்​களுக்கு படிப்​படி​யாக மாற்​றும் பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது.

இந்த மேம்​பாட்​டுப் பணி​கள் முதற்​கட்​ட​மாக சென்னை மண்​டலத்​தில் உள்ள சென்னை வடக்​கு, சென்னை மத்​தி​யம் மற்​றும் சென்னை மேற்கு ஆகிய மின் பகிர்​மான வட்​டங்​களில் செயல்​படுத்​தப்​படு​கின்​றன.

இதன் காரண​மாக, இன்​று​ முதல் 8-ம் தேதி இரவு 12 மணிவரை 2 நாட்​களுக்கு மின்​கட்​ட​ணத்தை ஆன்​லைன் மற்​றும் மின்​கட்டண வசூல் மையங்​கள் மூலம் செலுத்​தும் சேவை​கள் மற்​றும் புதிய மின் இணைப்பு விண்​ணப்ப சேவை​கள் ஆகிய​வற்றை சென்னை மண்​டலத்​துக்கு உட்​பட்ட பெரம்​பூர், வியாசர்​பாடி, தண்​டை​யார்​பேட்​டை, பொன்​னேரி, எழும்​பூர், தி.நகர், அண்​ணா​சாலை, மயி​லாப்​பூர், அம்​பத்​தூர், ஆவடி, அண்​ணாநகர் ஆகிய கோட்​டங்​களுக்கு உட்​பட்ட மின்​நுகர்​வோர் மற்​றும் பொது​மக்​கள் பெற இயலாது.

மேலும் நுகர்​வோருக்கு 2 நாட்​களுக்கு கூடு​தல் கால அவகாசம் வழங்​கப்​பட்டு மார்ச் 9-ம் தேதி வரை​யில் அபராதம் இன்றி மின்​கட்​ட​ணம் செலுத்த வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே மேற்​கண்ட பகு​தி​களில் உள்ள நுகர்​வோர் தங்​களது மின்​கட்​ட​ணங்​களை செலுத்​து​வதற்​கும் புதிய மின் இணைப்​புக்​கான விண்​ணப்​பம் உள்​ளிட்ட சேவை​களை​யும் முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு செயல்பட கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!