‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ வெளியிட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குனர் லிங்குசாமி நூலை வெளியிட எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குனர் வசந்த பாலன் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
ஐ.நா. மன்ற அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. கண்ணன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பத்திரிக்கையாளர் மானா பாஸ்கரன்,சூழலியல் எழுத்தாளர் கோ. லீலா ,எழுத்தாளர் பிரேமா ரவிச்சந்திரன், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் வெளியிட்டில் கலந்து கொண்டனர்.
கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கவிஞர் ஜின்னா ஆஸ்மி ஆகியோர் நல்துறை வழங்கினர்.
எல்லோருடைய உறவையும் சிறப்பாக அமைந்தது என்றாலும் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களுடைய உரை நேற்றைய விழாவின் ஆன்மா.
நூலை வெளியிட்டவர்களுக்கும், வாழ்த்துரைத்தவர்களுக்கும், விழாவுக்கு வந்திருந்த நண்பர்களுக்கும் அன்பார்ந்த நன்றி.
