உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் பாரதி உலா இன்று (23.12.2024) காலை 10 மணிக்கு மதுராந்தகம் வில்வராய நல்லூர் V.K.M உயர் நிலைப் பள்ளியில் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது.
பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை ,
மதுராந்தகம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை )திருமதி. இராம. அங்கயற்கண்ணி அவர்கள் ஏற்றினார்.
உலாவின் முதல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும் , நடிகருமான திரு. யார் கண்ணன் அவர்கள் கலந்து கொண்டார் .
தமிழ்த் தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து, பள்ளியின் செயலாளரும், DGSEA தொண்டு நிறுவனத்தின் தலைவருமான திரு. கி. குமார் அனைவரையும் வரவேற்றார்.
உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி. பத்மினி பட்டாபிராமன் பாரதி உலா குறித்த அறிமுக உரை வழங்கினார்.
மாணவ மாணவிகளின் நடனம், பேச்சரங்கம், பாடலரங்கம் மிக அருமையாக நடைபெற்றது.
தலைமை தாங்கிய திருமதி. அங்கயற்கண்ணி, தனது உரையில்,மாணவர்ளைப் பாராட்டியதோடு, அரசு ஏற்பாடு செய்யும் கலைவிழாக்களில் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் .
உரத்த சிந்தனையின் செயற்குழு உறுப்பினரும், மனவளப் பயிற்சியாளருமான திரு .குரு ஆறுமுகம்,
பொதுச் செயலாளர் திரு. உதயம்ராம், மற்றும் APEX அமைப்பின் செயலர் திரு. இளவரசு ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
எல்லா மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் , பாரதியார் புத்தகம் பரிசளி க்கப்பட்டது .
மாணவர்களின் பேச்சர ங்கில், அவர்கள் உரையிலிருந்து பத்மினி கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொன்ன மாணவர்களுக்கு,பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை
பிரபாகர் எழுதிய திருக்குறள் விளக்க உரை புத்தகம் பரிசாக வழங்கப் பட்டது.
சிறப்பாக பேசிய மாணவி விஜயலஷ்மி க்கு உதயம்ராம் 1000 ரூபாய் பரிசு அளித்தார்.
இயக்குனர் யார் கண்ணன், தனது சிறப்புரையில், தடைக் கற்களைத் தாண்டி தோல்விகளைக் கண்டு துவளாமல் முன்னேற வேண்டும் என்று எடுத்து ரைத்தார்.
நிகழ்ச்சிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ராதிகா ஜெகன்னாதன் அவர்கள் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் தொகுத்து வழங்கினார்.
உரத்த சிந்தனை செயற்குழு உறுப்பினர் திருமதி. பிச்சம்மா அவர்கள் நன்றி உரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், உரத்த சிந்தனை உறுப்பினர்கள்
திரு. தங்கம், திருமதி. இந்திராணி தங்கம், ஆர்ட்டிஸ்ட் மணி, திருமதி. நிர்மலா உதயம்ராம், திரு. ராஜாராம், திரு. ரமேஷ் ,திருமதி. குணசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டுப்பண், தொடர்ந்து சுவையான விருந்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தித் தொகுப்பு
பத்மினி பட்டாபிராமன்
படங்கள்
உதயம் ராம்
காணொலித் தொகுப்பு
மு .மனோன்மணி