’நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சசி – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இதனை விஜய் ஆண்டனியே தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஸ்வாசிகா, அஜய் திஷான், கருணாஸ், லிஜோ மோல் ஜோஸ், காவ்யா அனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவாளராக தர்ஷன், இசையமைப்பாளராக பாலாஜி ஸ்ரீராம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!