வேட்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை

சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதன்முறையாகக் களம் கண்டது. எடப்பாடி தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தவிர்த்து, மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட ’17C’ ஒரிஜினல் படிவத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

17C என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவம் ஆகும். இது தேர்தல் அலுவலர் மூலம் வேட்பாளர்களிடம் வழங்கப்படுகிறது. இந்த படிவம் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!